இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்களின் பிறந்தநாள். இன்று மோடி அவர்களுக்கு 70 வயதாகிறது. பிரதமரின் பிறந்தநாளையொட்டி (PM Modi Birthday) பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு வார காலமாக அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பிரதமருக்கு பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி 1950 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் (Gujarat) வாட்நகரில் பிறந்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா (Om Birla) பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிய செய்தியில், "மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் வாழ்க்கை, மனிதநேயத்தின் நலனுக்காகவும், தேசத்திற்கான சேவைக்காகவும் உழைக்க அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்." என்று எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) அவர்கள் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடியை வாழ்த்தினார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,"பிரதமர் மோடி, உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…... கடவுள் எப்போதும் உங்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதும், தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவையைப் பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன், அதற்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
இது தவிர இன்னும் பல தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பொது மக்களும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ALSO READ: Happy Birthday PM Modi: காவிய நாயகனின் காலம் கடந்த புகைப்படங்களின் தொகுப்பு