2k Love Story Success Meet :கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. படம் மிக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
நிறையப் பத்திரிக்கை நண்பர்கள், இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள், அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், அவர் தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி, தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமான், அவர் தந்த அருமையான பாடல்களுக்கும், இசைக்கும் நன்றி. நிறையப் பேர் ஒளிப்பதிவு, விளம்பர படம் போல் உள்ளதாகப் பாராட்டினார்கள், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகுவுக்கு நன்றி. போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக்கு நன்றி. இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணாவுக்கு நன்றி. புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 2கே லவ் ஸ்டோரி பிரேமலு மாதிரி கலக்ஷன் எடுக்கும்-சுசீந்திரன் பேச்சு!
மேலும் படிக்க | 2K லவ்ஸ்டோரி டிரெய்லர் வெளியீட்டு விழா!! இயக்குநர் சுசீந்திரன் உருக்கமான பேச்சு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ