இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்குவார்கள். அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டன.
7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 7 பேருக்கு பத்மபூஷன் விருதும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
பாடகர் ஜேசுதாசுக்கு பத்மவிபூஷன் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதேபோல சத்குரு ஜக்கி வாசுதேவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மறைந்த பத்திரிகையாளர் சோ சார்பில் அவரது மனைவி பத்மபூசன் விருதை ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார்.
ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபாகரம்கர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாடகர் கைலாஷ்கேர் ஆகி யோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம ஸ்ரீ விருது வழங்கினார். ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் குடியரசு தலைவரிடம் இருந்து விருது பெற்றுக்கொண்டார்.
மல்யூத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார். பண்டிட் விஷ்வா மோகன் பட் பத்ம விபூஷன் விருது பெற்றுக்கொண்டார்.
ஜித்தேந்திர நாத் கோஸ்வாமி குடியரசு தலைவரிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்றுக்கொண்டார்.
முதல் கட்டமாக பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 30-ம் தேதி வழங்கினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பி.ஏ.சங்மா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதையும், கிரிக்கெட் வீரர் வீராட்கோலி, தீபா மாலிக் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் வழங்கி இருந்தார்.