ஒரிசாவின் (Orissa) கட்டக்கில் (Cuttack) உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் (Cancer Hospital), கடந்த 10 நாட்களில், நோயாளிகள், உதவியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என சுமார் 100 பேரின் (100 People) கொரோனா (கொரோனா) தொற்று பரிசோதனை அறிக்கை நேர்மறையாக வந்ததையடுத்து, விசாரணைக்கு (Probe) உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன.
கொரோனா பாசிடிவ் நோயாளிகள் பற்றி தெரிய வந்தபிறகு, ஆச்சார்யா ஹரிஹார் பிராந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சுத்திகரிப்புக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாக் மாவட்ட ஆட்சியர் பவானி ஷங்கர் செயினி, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளிகள், அதிகாரிகளின் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டதே இதற்கு காரணமென்று குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது.
"புற்றுநோய் மருத்துவமனை அதிகாரிகளின் கவனக்குறைவான அணுகுமுறையாலேயே ஒரு நோயாளியிடமிருந்து வைரஸ் முழு மருத்துவமனையையும் பாதித்தது" என்று ஒரு நோயாளி கூறினார்.
COVID-19 க்கு நேர்மறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையின் சில நோயாளிகள் சனிக்கிழமை இரவு பஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள COVID மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது எதிர்ப்பை தெரிவித்து மோதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கட்டாக்கின் துணை போலீஸ் கமிஷனர் அகிலேஸ்வர் சிங் கூறுகையில், மங்களாபாகில் இருந்து படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.
நகரத்தில் இதுவரை 190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 144 பேர் பற்றி கடந்த மூன்று நாட்களில் தெரியவந்துள்ளது. இவர்ளில் பெரும்பாலோர் புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புகள் பற்றி கண்டறிய, சிவிக் அதிகாரிகள் புதன்கிழமை வரை நகராட்சி பகுதியை முழுமையாக மூடியிருப்பதாக அறிவித்துள்ளனர். நிலைமை மேம்படாவிட்டால் இந்த முடக்கம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ALSO READ: COVID-19: இந்தியாவில் கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் முதல் முறையாக 60% ஐ தாண்டியது