புது டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே பெரும் அதிரடி ஆட்டங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது. ஊடக அறிக்கையின்படி, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரசின் தலைமை மாற்றத்திற்கு பிறகு கோபத்தில் இருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங், இன்று தேசிய தலைநகர் புதுடெல்லிக்கு செல்கிறார். இது மட்டுமல்ல, டெல்லி செல்லும் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார் என்ற தகவல் தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
முன்னாள் பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி வருகிறார். ஆதாரங்களின்படி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் கூறுகின்றன. கேப்டன் மற்றும் அமித் ஷாவின் சந்திப்பு நடைபெறவுள்ளதால், டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முழுவதும் பரபரப்பாக உள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நவ்ஜோத் சிங் சித்துவுடனான சர்ச்சைக்கு இடையே கேப்டன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டார். தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்திய கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வராக சித்துவை நியமிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Punjab அமைச்சரவை விரிவாக்கம்: 15 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கேப்டன் அமரீந்தர் ஏற்கனவே சந்தித்துள்ளனர். ஆனால் இப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியில் உள்ள நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சரை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அதிகரித்து வந்தது.
கடந்த செப்.18 ஆம் தேதி ஆளுநரிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பிறகு செய்தி ஊடகங்களிடம் பேசிய கேப்டன் அமரீந்தர் சிங், 'எனது ராஜினாமா குறித்து முடிவு பற்றி காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். கடந்த இரண்டு மாதங்களில் இது மூன்றாவது முறையாக நடக்கிறது. என்னால் அரசாங்கத்தை நடத்த முடியவில்லை என்று மேலிடம் நம்புகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு (சோனியா காந்தி) யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவரை முதல்வராக்குவார் என்று தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கேப்டன் அமரீந்தர், எனது ஆதரவாளர்களிடம் பேசி, சமயம் வரும் போது ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ALSO READ | நான் அவமானமாக உணர்கிறேன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் சோகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR