புது டெல்லி: தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவி காலம் மே 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் மே 15ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார் என்று சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராஜீவ் குமார்?
ராஜீவ் குமார் தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் நிர்வாகப் பதவிகள் உட்பட பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றிய 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் பரவலான நிர்வாக அனுபவம் பெற்றவர். மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.
ராஜீவ் குமார் மார்ச் 19, 2012 முதல் மார்ச் 12, 2015 வரை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் இணைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மார்ச் 12, 2015 முதல் ஆகஸ்ட் 30, 2017 வரை பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம், D/o பணியாளர்கள் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் நிறுவன அதிகாரி மற்றும் கூடுதல்/சிறப்பு செயலாளராக பணியாற்றி உள்ளார்.
ராஜீவ் குமாருக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
In pursuance of clause (2) of article 324 of the Constitution, the President is pleased to appoint Shri Rajiv Kumar as the Chief Election Commissioner with effect from the 15th May, 2022.
My best wishes to Shri Rajiv Kumar pic.twitter.com/QnFLRLiVPm— Kiren Rijiju (@KirenRijiju) May 12, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR