புல்தானா: மகாராஷ்டிர மாநிலம் சம்ருத்தி மகாமார்க்கில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலியாகினர்... பேருந்தில் இருந்து 25 உடல்கள் எடுக்கப்பட்டன, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான தகவல்களின்படி 25 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.
Maharashtra | Several feared dead after a bus burst into flames on Samruddhi Mahamarg expressway in Buldhana: Buldhana Police pic.twitter.com/Zs6Mt0tfsT
— ANI (@ANI) July 1, 2023
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து, இன்று (2023, ஜூலை 1, சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
"பேருந்தில் இருந்து 25 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்தனர். 6-8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்" என்று புல்தானா காவல்துறை துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி கூறினார். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றதாக புல்தானா எஸ்பி சுனில் கடசென்ர் தெரிவித்தார். சம்பவத்தின் போது பேருந்தில் 32 பயணிகள் இருந்தனர், அவர்களில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுதான்
டயர் வெடித்ததால் பேருந்து கவிழ்ந்ததாகவும், அதன் பிறகு பேருந்து தீப்பிடித்ததாகவும் அவர் கூறினார். சாலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கிவிட்டது. ஆனால், இந்த நேரத்தில் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பதே முன்னுரிமை" என்று திரு கடசனே கூறினார்.
மேலும் படிக்க | விபத்தில் சிக்கிக்கொண்ட பிரபல தொகுப்பாளினி..பதறிய ரசிகர்கள்..பிறகு என்னாச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ