சமீபத்தில் ஒரு காதலிப்பதாக சமூக ஊடகங்கள் வாயிலாக செய்யப்பட்ட மோசடியில் ரூ.12.24 லட்சம் இழந்தார் மும்பைவாசி ஒருவர். ஒரு பெண் பயனருக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பியதில் தொடங்கியது இந்த மோசடி என்று புகார்தாரர் சொல்கிறார்.
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மோசடிகள் அதிகரித்து வருவது கவலைகளை அதிகரித்து வருகின்றன. ஊடக அறிக்கைகளின்படி, 47 வயதான சான்டாக்ரூஸ் குடியிருப்பாளரிடம் ஒரு கும்பல் பணம் பறித்தது.
புகார்தாரர் சமீபத்தில் பேஸ்புக்கில் நட்பாக இருந்த ஒரு பெண்ணுடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது எடுத்த வீடியோ மூலம் அவரை மிரட்டி பணம் பறித்தார்.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யூடியூப் மற்றும் டெல்லி போலீஸ் சைபர் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த குறிப்பிட்ட வீடியோவை இணையதளத்தில் இருந்து அவரது வீடியோவை அகற்றுவதற்கு பணம் கொடுக்குமாறு கேட்டனர்.
மேலும் படிக்க | ஹேக்கர் இணைப்புகளுக்கு சவால் விடும் சைபர்வால்
புகார்தாரர் பிரியங்கா ஷர்மா என்ற பேஸ்புக் பயனருக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பினார். அவரது நண்பர் கோரிக்கையை ஏற்று, அந்த பெண் அவருடன் பேச ஆரம்பித்தார், பின்னர் தனது வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து கொண்டார்.
வாட்ஸ்அப் எண்ணுக்கு பிரியங்கா ஷர்மாவை அழைத்து சிறிது நேரம் பேசியதாக புகார்தாரர் தெரிவித்தார். ஒரே இரவில், இருவருக்கும் இடையே மூன்று வீடியோ அழைப்புகள் நடந்தது.
ஒரு வீடியோ அழைப்பில், அந்தப் பெண் நிர்வாணமாக இருந்ததாகவும், ஆடைகளை களையும்படி புகார்தாரரை சமாதானப்படுத்திய அந்தப் பெண், வீடியோவைப் பதிவுசெய்து வைத்து மிரட்டினார்.
கேட்ட தொகையைக் கொடுக்கத் தவறினால், அந்த வீடியோவை சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை
அதனால் பயந்துபோன அவர் முதலில் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.20,000 அனுப்பினார். சில நாட்களுக்குப் பிறகு டெல்லி போலீஸ் சைபர் செல் அதிகாரி என்று அறிமுகம் செய்துக் கொண்ட ஒருவர், ஆபாச வீடியோ யூடியூப்பில் இருப்பதாகவும் ஆனால் அது தளத்தின் கொள்கையை மீறுவதாகவும் எனவே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
எனவே அதற்கும் பணம் கொடுத்திருக்கிறார். பிறகு சம்பந்தப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே கொலை வழக்குப் பதிவு செய்து வருவதாகவும், காவல்துறை அதிகாரியாகக் காட்டிக்கொண்ட நபர் மிரட்டியிருக்கிறார்.
வழக்கில் பெயர் வர வேண்டாம் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அவர்கலுக்கும் அணம் கொடுத்திருக்கிறார். இறுதியாக 12.24 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகும் மிரட்டல்கள் வெவ்வேறு வகையில் தொடரவே வேறு வழியில்லாமல் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான துன்புறுத்தலுக்குப் பிறகு, அவர் இறுதியாக சைபர் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்.
பாலியல் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
தெரியாத நண்பர் கோரிக்கைகளை அனுப்பவோ/ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம்
சமூக ஊடக தளங்களில், தெரியாத பயனர்களிடமிருந்து வரும் நட்புக் கோரிக்கைகளை ஏற்கவேண்டாம். அதேபோல், உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கு நண்பர் கோரிக்கைகளை அனுப்பவேண்டாம்.
எந்த சலுகைகளிலும் பங்கேற்க வேண்டாம்
மோசடி செய்பவர்கள் சமூக ஊடக பயனர்களை சலுகைகள் அல்லது ஒப்பந்தங்களில் பங்கேற்கச் சொல்லி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். சமூக தளங்களில் தெரியாத பயனர்களிடமிருந்து இதுபோன்ற கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்
அந்நியர்களிடம் இருந்து பணம் கேட்பதை தவிர்க்கவும்
சமூக ஊடக தளங்களில் அந்நியருடன் ஒரு பிணைப்பை உருவாக்கினால், பணத்திற்கான கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்.
அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை பகிர வேண்டாம்
சமூக ஊடக பயனர்கள் மற்றவர்களுடன் நெருக்கமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலே விவரிக்கப்பட்ட வழக்கில் நடந்ததைப் போல, மோசடி செய்பவர்கள் உங்களை அச்சுறுத்த ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.
உதவி பெறுங்கள்
பாலியல் மோசடியில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால், காவல் துறையின் சைபர் செல்லைத் தொடர்பு கொள்ளவும். சைபர் குற்றங்களுக்கு எதிரான புதிய ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ள 1930 என்ற எண்ணை டயல் செய்யலாம்.
மேலும் படிக்க: Password-ஐ ஹேக் செய்ய சில நொடிகள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR