கிரிப்டோகரன்சிகளுக்கு ஜிஎஸ்டி! ஆம், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
நாட்டில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்படலாம். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கிரிப்டோகரன்சிகளுக்கு 28 சதவீத வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. இந்த வரி விகிதம் லாட்டரிகள், கேசினோக்கள் மற்றும் பெட்டிங் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
அறிக்கைகளின்படி, ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இந்த திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டால், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் (மைனிங், வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்) 28 சதவீத வரி விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | ஜிஎஸ்டியில் புதிய மாற்றம்! சாமானியர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது?
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் எப்போது நடைபெறும், அதன் தேதி என்ன என்பது தற்போது அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, கிரிப்டோகரன்சி மற்றும் என்எப்டி மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் இந்தியாவில் தனித்தனியான வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரியில் 2022-23 பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ பரிவர்த்தனைகளின் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதில் 1 சதவீத டிடிஎஸ் (மூலத்தில் வரி விலக்கு) அடங்கும். கிரிப்டோ வருவாய் மீதான இந்த வரி விதிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தகவலின்படி, 28 சதவீத ஜிஎஸ்டி கிரிப்டோ வருமான வரியான 30 சதவீதத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும். இது தவிர, ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீத டிடிஎஸ் வசூலிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நண்பர்கள் அல்லது உறவினருக்கு கிரிப்டோகரன்சி அல்லது டிஜிட்டல் சொத்தை பரிசளிப்பதற்கும் வரி வசூலிக்கப்படலாம். வர்சுவல் டிஜிட்டல் சொத்துகள் மீதான வரியை அறிமுகப்படுத்த வருமான வரிச் சட்டத்தில் 115பிபிஎஹ் என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.
கடந்த மாதம் அமெரிக்கப் பயணத்தின் போது, நிர்மலா சீதாராமன், உலகளவில் கிரிப்டோகரன்சி சந்தையின் அளவு குறித்து சந்தேகங்களை எழுப்பினார். மேலும் பணமதிப்பு நீக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்குமுறை பொறிமுறையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR