கர்நாடகா மாநிலத்திற்கென்று தனி கொடியை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அக்கொடிக்கான ஒப்புதல் வாங்குவதற்கு மாநில கொடி குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு கர்நாடகா மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது!
காங்கிரஸ் தலைமையிலான கார்நாடகா மாநில அரசு ஆனது கடந்த 2017 ஆம் ஆண்டு 9 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து, மாநில அரசிற்கான தனி கொடியினை வடிவமைக்க திட்டமிட்டது. பின்னர் இந்த கமிட்டி மாநில அரசிர்கான கொடி வடிவமைப்பினை அரசிடம் ஒப்படைத்துள்ளது.
Karnataka govt approves state flag. It will be sent to central govt for approval, after that it will be announced as the state flag. pic.twitter.com/BwidTfnyUb
— ANI (@ANI) March 8, 2018
மூவ்வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கொடியில் உள்ள மஞ்சள் நிறம் மன்னித்தலையும், வெள்ளை நிறம் அமைதியையும், சிவப்பு நிறம் வீரத்தையும் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுளது.
மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த கொடியானது, தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
இதுகுறித்து கார்நாடகா மாநில பாஜக உறுப்பினர் மத்தியில் எதிர்மறையான கருத்துகளே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒருமைப் பாட்டிற்கு எதிராக தனிக்கொடி, தனிதிட்டங்கள் என மாநில அரசு ஒதுங்கி செயல்படுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளனர்.