நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஆறு பெண் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த முறையை விட அதிக பெண்கள் வெற்றி பெற்றாலும், இம்முறை, அமைச்சரவையில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. இம்முறை, ஆறு பெண் அமைச்சர்களாக குறைந்து உள்ளது.
முதல் முறையாக, ராணுவ பெண் அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், இம்முறையும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், 52, சாத்வி நிரஞ்சன் ஜோதி, 52, ரேணுகா சருதா, 55, தேவஸ்ரீ சவுத்ரி, 48, ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.