ஸ்ரீதேவியின் உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Last rites ceremony of #Sridevi begins at Vile Parle Seva Samaj Crematorium in Mumbai. pic.twitter.com/BGvnnPhVbm
— ANI (@ANI) February 28, 2018
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சற்று நேரத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. முக்கிய சினிமா நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன் பிரபல நட்சத்திரங்கள் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான் உள்ளிட்டோர் மயானத்தில் அஞ்சலி செலுத்தினர்
ஸ்ரீதேவியின் உடல் மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலமாக வில்லே பார்லே மயானத்துக்கு வந்தடைந்துள்ளது. இறுதிச் சடங்குகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது.
முதலில் ஸ்ரீதேவியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
Mumbai: Mortal remains of #Sridevi to be cremated with state honours. pic.twitter.com/OC64HUt2rv
— ANI (@ANI) February 28, 2018
#WATCH Mumbai: Mortal remains of #Sridevi wrapped in tricolour, accorded state honours. pic.twitter.com/jhvC9pjLMp
— ANI (@ANI) February 28, 2018
திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.