பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து, ஜனவரி 25 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்தும் தீயில் குதித்தும் தற்கொலை செய்வதாகவும், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட ஆயிரக்கணக்கான பெண்கள் கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி மத்திய பிரதேசம் ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளன.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படும் பத்மாவதி எனும் ''பத்மாவத்'' திரைப்படம் வரும் ஜன.,25-ஆம் நாள் நாடுமுழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்தது. இதனையடுத்து இப்படம் வரும் ஜனவரி 25-ஆம் நாள் 'பத்மாவத்' என்ற பெயரில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இப்படத்தினை மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானாவில் திரையிட அம்மாநிலம் தடை விதிப்பதாக அறிவித்தது. இதனையடுத்து இப்படத்திற்கு தடை விதித்ததினை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியபிரதேஷ், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜாராத் மாநிலத்தில் பத்மாவத் படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என அறிவித்துள்ளது.
இருப்பினும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனவும் நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அவர்கள், பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக ஆயிரக்கணக்கான பெண்கள், கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே போன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக 1908 பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். சித்தூர்கர் கோட்டையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.
Rajasthan and Madhya Pradesh govt moved to Supreme Court seeking modification in its earlier order to lift ban on the film in four states. Supreme Court to hear the matter tomorrow. #Padmavaat pic.twitter.com/gPllEwJTsR
— ANI (@ANI) January 22, 2018