ஐ.நா.,வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா திமிரோடு பேச்சு பேசியதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமீபத்தில் ஐ.நா.,வில் பொது சபையில் பேசினார். அவர் பேசும் போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசினார். இந்தியா ஐ.டி., துறையில் உலகிற்கு சவால் விட்டு வருவதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு தலைமையிடமாக இருப்பதாவும், இந்தியாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், அறிஞர்களை உருவாக்கி அவர் கூறி இருந்தார்.
இதற்கு சீன ஊடகம் திமிர் பேச்சு என்ற தலைப்பில் கருத்து தெரிவித்து வருகிறது. அதில், பாகிஸ்தானில் தீவிரவாதம் இருப்பது உண்மைதான் ஆனால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா பேசியுள்ளது. பொருளாதார ரீதியிலும் வெளியுறவுதுறையிலும் இந்தியா கனிசமான வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இது போன்ற திமிர் பேச்சை இந்தியா மேற்கொண்டு பெருமையடித்து வருகிறது.
இந்தியா பக்கத்து நாடுகளுடன் பகைத்து கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் வசீகரத்திற்கு உட்பட்டு வருகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.