கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12 கோடி ஆகும். அதன்படி இந்த லாட்டரியின் வெற்றியாளரை கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் கலந்து கொண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்தார். அதன்படி இந்த பம்பர் லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்தது.
இந்நிலையில், தற்போது முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலனுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி இவர் இந்த லாட்டரி (Lottery) சீட்டை திருப்பணித்துராவில் உள்ள ஒரு கடையில் வாங்கியாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு ரூ.12 கோடியில் 10 சதவீதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ரூ.7.39 கோடி (Prize Money) கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; ₹190 கோடி லாட்டரி பரிசு டிக்கெட் தொலைந்த சோகம்
இதற்கிடையே ஏற்கனவே கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது.பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி துபையில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம் ’கூகுல் பே’ மூலம் பணம் அனுப்பி ஓணம் பம்பர் லாட்டரி ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார்.
அதன்படி சைதல்வி க்கு கிடைத்த இந்த பெரிய பரிசுச் செய்தி தற்போது கேரளத்தில் வைரலாகி வருகிறது. முதல்பரிசான ரூ. 12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ. 7 கோடியே, 56 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:வேலை போன இந்தியருக்கு Dubai Lucky Draw-வில் அடித்தது அதிர்ஷ்டம்: ரூ.7 கோடி வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR