வினோதம்: திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்

Last Updated : Mar 2, 2017, 06:32 PM IST
வினோதம்: திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்  title=

தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 23 ரெசிடென்சியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த ரெசிடென்சியல் கல்லூரிகளில் மொத்தம் 4000 மாணவிகள் படித்து வருகின்றனர்  

இந்நிலையில், கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறப்பட்டதாவது:- கல்லூரிகளில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் படிப்புகளில் சேர திருமணமாகாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தெலுங்கானா மாநிலம் முழுவதும் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆண்கள் கல்லூரிக்கு வரும்போது, பெண்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணமான பெண்கள் விண்ணப்பித்தால் அதனைத் தடுக்க மாட்டோம் என கல்லூரி கூட்டமைப்பை சேர்ந்த அதிகாரி கூறினார்.

Trending News