இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் செயல்முறை தொடங்கியது

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. 

Last Updated : Dec 21, 2019, 12:58 PM IST
இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் செயல்முறை தொடங்கியது title=

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த செயல்முறையின் முதற்கட்டமாக இன்று குஜராத்தில் ஏழு பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவருக்கு கட்ச் குடியுரிமை சான்றிதழ் அளித்தார். சித்திரவதைக்கு ஆளான பின்னர் குஜராத்தில் தஞ்சம் புகுந்த இந்த மக்கள் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குஜராத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய ஹசினா பென், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். அதன் பின்னர் அவருக்கு இப்போது இந்திய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. ஹசினா பென் முதலில் இந்தியாவைச் சேர்ந்தவர். ஆனால் 1999-ல் திருமணத்திற்குப் பிறகு, அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அவரது கணவர் பாகிஸ்தானில் வசித்து வந்தபோது இறந்தார், அதன் பிறகு அவர் இந்தியா திரும்ப முடிவு செய்தார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹசீனா இந்தியாவின் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். எனினும் அவரது குடியுரிமை குறித்த வாதங்கள் இழுபறியில் நீடித்தது, தற்போது குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கடந்த டிசம்பர் 18, 2019 அன்று இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

முன்னதாக, குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் உள்ள ஹசீனா பென் இந்திய குடியுரிமை கோரி கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார். எனவே துவாரகா கலெக்டர் டாக்டர் நரேந்திர குமார் மீனா சார்பாக ஹசினா பென்னுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில்., மத்திய அரசின் இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது ​​தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. 

Trending News