புதுடில்லி: திகார் சிறைக்குள் இன்று ஒரு பழிவாங்கும் படலம் அரங்கேறி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கைதியை, மற்றொரு கைதி கொலை செய்தார். இந்த சம்பவம் ஜூன் 29ஆம் தேதி திங்கள்கிழமையன்று இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியது.
கொலை வழக்கு ஒன்றில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 வயது இளைஞர் மெஹ்தாப், அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவரால் பல முறை குத்திக் கொல்லப்பட்டார் என்று டெல்லி காவல்துறையினர் கூறுகின்றனர்.
திகார் சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணையின் போது திஹார் சிறை எண் 8 இல் அடைக்கப்பட்டிருந்த கைதி ஜாகிர் தானே உருவாக்கிய கத்தி போன்ற உலோகத் துண்டால் மெஹ்தாப் என்ற கைதியை பல முறை குத்தினார் என்பது தெரியவந்தது.
Read Also | பிரியங்கா காந்தி ஒரு மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவு
டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் ஜாகீரின் மைனர் சகோதரியை 2014 ஆம் ஆண்டில் மெஹ்தாப் பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். அதற்காக டெல்லியின் அம்பேத்கர் நகர் காவல் நிலைய போலீசார் மெஹ்தாப்பை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 376D, 328, 363, 342, 120B IPC மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் மெஹ்தாப் கைது செய்யப்பட்டு, திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஜாகீரின் மைனர் சகோதரி, சில நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜாகீரின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. தனது சகோதரியின் பாலியல் பலாத்காரம் மற்றும் மரணத்திற்கு பழிவாங்க விரும்பினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் திகார் சிறையில் இருந்ததால் பழிவாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்தார் ஜாகீர்.
எனவே, பழி வாங்குவதற்காக பல்வேறு திட்டங்களை ஜாகீர் தீட்டினார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக திகார் சிறைக்கு சென்றார். அண்மையில் தான் ஜாகீர் சிறை எண் 8 இலிருந்து, வார்டு எண் 4இல் உள்ள தரை தளத்திற்கு மாற்றப்பட்டார். இந்த இடமாற்றமானது, ஜாகீரின் வேண்டுகோளின் பேரில் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு அவர் இருந்த வார்டில் உள்ள மற்ற கைதிகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்ததால், ஜாகீரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
Read Also | Pierce Brosnan: ஜேம்ஸ் பாண்டாக தொடர்ந்து நடிக்கவில்லை என்பதால் வருத்தமில்லை
சிறையில் கொலை செய்யபப்ட்ட மெஹ்தாப் முதல் தளத்தில் உள்ள 4 வது வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஜூன் 29 அன்று, காலை பிரார்த்தனை நேரத்தில், மற்ற கைதிகள் பிரார்த்தனைக்காக வெளியே வந்தபோது, ஜாகீர் மாடிக்குச் சென்று கத்தி போன்ற பொருளால் மெஹ்தாப்பை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு, மெஹ்தாப் DDU மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மெஹ்தாப் மீது ஜாகிருக்கு ஆழமான கோபம் இருந்ததாகவும், பழிவாங்குவதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஹரி நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.