கர்நாடகாவில் 7ம் வகுப்பு பாடத்தில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பற்றிய பாடம் நீக்கம்

மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் கூர்கிஸ் இன மக்கள் ஆயிரக்கனக்காணவரை  சிறைபிடித்து கட்டாய மத மாற்றம் செய்ததால் அவர் மதவெறியர் என அழைக்கப்படுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 01:17 PM IST
  • கர்நாடகாவில் 7ம் வகுப்பு பாடத்தில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது
  • பாஜகவும் வேறு சில அமைப்புகளும் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் கூர்கிஸ் இன மக்கள் ஆயிரக்கனக்காணவரை சிறைபிடித்து கட்டாய மத மாற்றம் செய்தார் என கூறப்படுவதால் அவரை மதவெறியர் என கூறி வருகின்றன.
  • திப்பு சுல்தான் ஒரு சர்ச்சைக்குரிய நபராக கருதப்படுகிறார். ஏனெனில் அவரது ஆட்சியில் கூர்கிஸ் இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர் என்று நம்பப்படுகிறது.
  • ALSO READ | ஊரடங்கில் காய்கறி கடை விரித்த மூதாட்டி… மொத்தமும் வாங்கி கருணை காட்டிய அதிகாரி…!!!
  • மேலும், அப்போதைய மைசூரு மகாராஜாவை ஆதரித்ததால், தீபாவளி நாளில், மண்டியா மாவட்டம் மெல்கோட் என்ற கோயில் நகரத்தில் மண்டியம் ஐயங்கர்களை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • கோவிட் -19 தொற்றுநோயால் 2020-21 ஆண்டிற்கான பாடத்திட்டங்களைக் குறைக்க கர்நாடக அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, 18 ஆம் நூற்றாண்டின் சர்ச்சைக்குரிய மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான் மற்றும் அவரது தந்தை ஹைதர் அலி குறித்த பாடங்கள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டன.
  • ALSO READ | தாயை கருணைக் கொலை செய்த மகன்… ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
  • இருப்பினும், திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் 6 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து நீக்கபப்டவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செய்தி நிறுவனமான PTI இடம் தெரிவித்தன.
  • இந்த கல்வி ஆண்டில், தொற்றுநோய் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டங்களைக் குறைக்க முடிவெ செய்யப்பட்டு, வேலை நாட்களும் 120 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அரசியல் ஆதாயத்தை மனதில் கொண்டு பாஜக அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
  • திப்பு சுல்தான் ஒரு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நபர் என்பதை சுட்டிக்காட்டிய டி.கே. சிவகுமார், இதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் குழு ஒன்றை அமைக்கும் என கூறினார்
கர்நாடகாவில்  7ம் வகுப்பு பாடத்தில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பற்றிய பாடம் நீக்கம் title=

Trending News