குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை பாஜக அறிவிக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகளை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லியில் ஆலோசனை நடத்துவற்காக 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எலமரம் கரீம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகிய 2 தலைவர்கள்
திமுக சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் சுபாஷ் தேசாய், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சந்திரசேகர ராவ், காங்கிரஸ் இக்கூட்டத்தில் பங்கேற்பதால் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் எந்த தளத்தையும் பகிர்ந்து கொள்ளும் பேச்சே இல்லை என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்துவிட்டு கூட்டம் நடத்துவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் சந்திர சேகர ராவ் கூறியுள்ளார்.
இதே போல் ஆம் ஆத்மி கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லி சென்ற சந்திரசேகர ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பேசியது நினைவு கூரத்தக்கது. இதே போல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மத்திய அரசின் அக்னிபாத் திட்டம்: தகுதி, சம்பளம், இழப்பீடு விளக்கம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR