நாட்டின் 13வது துணை ஜனாதிபதி: வெங்கையா நாயுடு பதவியேற்றார்

Last Updated : Aug 11, 2017, 11:24 AM IST
நாட்டின் 13வது துணை ஜனாதிபதி: வெங்கையா நாயுடு பதவியேற்றார் title=

இந்திய நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். 

இன்று காலை டெல்லியின் ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் வெங்கையா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, தீன் தயாள் உபத்யாய் சிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

 

 

இந்திய நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக இன்று வெங்கையா நாயுடு பதவியேற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி அன்று நாட்டின் 14-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  நடைபெற்றது. இந்த  தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதுடன் இவர் கடந்த 25-ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். 

அதேபோல புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தி - ராஜாஜியின் பேரனுமான, கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் அதிகம் ஓட்டுகள் பெற்று வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக இன்று வெங்கையா நாயுடு பதவி ஏற்றார். இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்கள்.

Trending News