புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) உட்பட வட இந்தியா முழுவதும் மீண்டும் கடுமையான குளிரை மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளது. அதாவது இமையமலையில் ஏற்பட்டுள்ள புதிய பனிப்பொழிவு காரணமாக, ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி வரை செல்லக்கூடும். வானிலை ஆய்வுத் மையத்தின் கூற்றுப்படி, மேற்கத்திய வானிலை காரணமாக, வட இந்தியாவில் இன்று கடுமையான குளிர் ஏற்படும் என எச்சரித்துள்ளது. இன்று மாலை டெல்லியில் லேசான மழை பெய்யக்கூடும். டெல்லியில் இன்று காலை 5 மணிக்கு 13.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல 20-25 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
ஜனவரி 9 முதல் 11 வரை குறைந்தபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி வரை இருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்த்தியான மேகங்கள் காணப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படத்தை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
India Meteorological Department: Latest satellite image shows convective clouds over northwest India (J&K, HP, Uttarakhand and some parts of Punjab, Haryana, Rajasthan and Uttar Pradesh) pic.twitter.com/74u8fZljrA
— ANI (@ANI) January 6, 2020
சில நாட்களாக வட இந்தியா குளிரில் இருந்து நிவாரணம் பெற்றது. ஆனால் மிதமான மூடுபனி மட்டும் இருந்தது. இதன் காரணமாக டெல்லிக்கு வரும் ரயில்கள் 5 முதல் 6 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) 15 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காஷ்மீரில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லடாக் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2 முதல் 6 அங்குல பனிப்பொழிவு ஏற்பட்டது. பனிப்பொழிவு காரணமாக வறண்ட குளிரில் இருந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் முகம் மலர்ந்தது. ஸ்ரீநகரில் இரவு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுவிட்டது. குல்மார்க் ஸ்கை-ரிசார்ட் பகுதியில் மைனஸ் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவாகியுள்ளது. லடாக் உள்ள லேவில் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 18.3 டிகிரி ஆக குறைந்துள்ளது.
ராஜோரி பூஞ்சின் பிர் பஞ்சால் மலைகள் முதல் வைஷ்ணோ தேவியின் திரிகுட்டா மலைகள் வரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மழை பெய்து வருகிறது. கடவுளை பார்க்க வரும் பக்தர்களும் பனிப்பொழிவை அனுபவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான சிம்லாவில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. சிம்லாவில் திங்கள்கிழமை மழை பெய்தது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.