புது டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. அச்சங்களுக்கு மத்தியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலைக்காக மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதைக் காண முடிந்தது. மேலும் சில கடைகள் மற்றும் நிறுவனங்களும் திறக்கப்பட்டன. இருப்பினும், இந்த கலவரத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சில குடும்பங்கள் ஸ்ரீராம் காலனியின் சமூக மையத்தில் தங்கியுள்ளன. கலவரத்தில் தங்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். அவர்கள் இன்னும் அச்சத்துடனும், பிரமிப்புடன் இருக்கிறார்கள். எங்கு செல்வது என்று புரியவில்லை. அவர்களின் நிலைமையை பற்றி கேள்வி பட்டால், உங்கள் மனதில் மிகப்பெரிய வழி ஒன்று ஏற்படுவது நிச்சியம்.
சமூக மையத்தில் சுமார் 48 குடும்பங்கள் தங்கியுள்ளன:
டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் காலனியில் அமைக்கப்பட்டுள்ள சமூக மையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பங்கள், தங்கள் வீடு காவ்டி சாலை பகுதியில் இருப்பதாக தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார்கள். உள்ளூர்வாசிகளின் உதவி செய்ததால், அவர்கள் இந்த சமூக மையத்திற்கு வந்தார்கள். இதற்கிடையில், ஒரு பெண் தனது வீடு எரிந்துவிட்டதை அறிந்தது அழுதபடி இருந்தார்.
அந்த பெண்மணி சொன்னார்- என் வீடு எரிந்தது:
எங்களிடம் எதுவும் மிச்சமில்லை என்று பாதிக்கப்பட்டவர் கூறினார். இப்போது நாம் எங்கு செல்வோம் என்று புரியவில்லை. தன்னைச் சுற்றியுள்ள பல பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சமூக மையத்தில் தங்கியுள்ளனர் என்று அவர் கூறினார். இந்த குடும்பங்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
ரூ.50,000 நிதியுதவி:
தற்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரி நவீன் குமார் தெரிவித்தார். இப்போதே, இந்த குடும்பங்களுக்கு உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் உதவி வழங்கப்படும். இதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி செய்யும் சிறுமிகள்:
இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ உள்ளூர் மக்களும், கராத்தே பயிற்சி முகாம்களைச் சேர்ந்த சிறுமிகளும் வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பிற்காக தான் இங்கு வந்துள்ளதாகவும், குடும்பங்களின் அச்சத்தை குறைக்க முயற்சித்ததாகவும் அவர்கள் கூறினார்கள். இந்த முகாமில் சுகாதார பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.