வேலையையும்-தனிப்பட்ட வாழ்க்கையையும் சமாளிப்பது எப்படி? 6 சிம்பிள் டிப்ஸ்!

Work Life Balance Tips : வேலை வாழ்க்கையையும், நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக பார்ப்பது ஒரு பெரிய வித்தை. அதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 30, 2024, 02:38 PM IST
  • வேலையையும் வாழ்க்கையையும் சமாளிக்க டிப்ஸ்
  • பிடித்த விஷயங்களை செய்வது மிகவும் முக்கியம்..
  • வேறு என்னென்ன தெரியுமா?
வேலையையும்-தனிப்பட்ட வாழ்க்கையையும் சமாளிப்பது எப்படி? 6 சிம்பிள் டிப்ஸ்! title=

Work Life Balance Tips : தற்போதைய காலக்கட்டத்தில் “work life balance” என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. அதே நிலையில், நாம் வேலையில் கவனம் செலுத்த வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும். அப்போதுதான், நாம் சரியாக சம்பாதிக்கவும் முடியும், வாழ்க்கையும் நடத்த முடியும். ஒரு சிலர், தங்கள் வேலையில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்து, குடும்பம், குழந்தைகள் என தன்னை நம்பி இருக்கும் அனைத்து உறவுகளையும் மறந்து விடுவர். அப்படிப்பட்டவர்கள், வேலையையும் நன்றாக பார்த்து, தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சரியாக வாழ்வது எப்படி? இங்கு பார்ப்போம். 

விருப்பங்களில் கவனம் செலுத்துதல்:

நாம் பிடித்த வேலையையே பார்த்து வந்தாலும், அதைத்தாண்டி பிடித்த விஷயங்கள் என ஒரு சில, நமக்கு இருக்கும். எனவே, அப்படிப்பட்ட பிடித்த விஷயங்களை நாம் தினசரி செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்படி பிடித்த விஷயத்தை செய்யும் போது, தனிப்பட்ட நபராக உங்களுக்குள் ஒரு உந்துதல் வரும். இதனால், வேலையையும் சரியாக பார்க்க முடியும், உங்களுக்கும் உங்களுடனான உறவு அழகாக மாறும். 

நோக்கத்தில் கவனம்:

நீங்கள் ஒரு வேலையை செய்யும் போது இலக்கை நோக்கி ஓடுவது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கான நோக்கமும் தெளிவாக இருக்க வேண்டும். இதனால், நீங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அது பெரிதாக உங்களை பாதிக்காது. வேலையையும் சரியாக பார்க்க முடியும். 

வளர்ச்சி மனநிலை:

வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையை வைத்துக்கொண்டால் ரிசல்டில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சவால்களை எதிர்கொள்ள தயங்காமல் இருப்போஜ்ம். இது போன்ற மனநிலைதான் நம்மை வளர்த்துக்கொள்ள உதவும். மேலும், நாம் போட்ட முழு முயற்சிக்கு தேவையான பலன்கள் கிடைக்கும் போது அதை முழுமையாக அனுபவிக்கவும் முடியும். 

மேலும் படிக்க | உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

நம்பிக்கை:

நீங்கள் ஒரு தலைமையிடத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் டீமில் இருப்பவர்களிடம் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு நீங்களே அனைத்தையும் செய்து முடித்து விடக்கூடாது. அவர்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்தால்தான் உங்களால் உங்களுக்கான வேலையை சரியாக பார்க்க முடியும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடியும்.

எல்லைக்கோடு:

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை ஷிஃப்ட் டைமை தாண்டி வேலை பார்க்க கூறினாலோ, அல்லது உங்களுக்கு விடுமுறை இருக்கும் நாளிலும் வேலை பார்க்க சொல்லி கூறினாலோ அது உங்கள் பிரச்சனை இல்லை. ஒரு முறை இதை செய்து பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்த முறை இதை செய்யாமல் இருப்பது மிகவும் சிரமம் ஆகிவிடும். எனவே, இதற்கென்ற தனியான எல்லைக்கோடுகளை போடுவது உங்கள் கைகளில் இருக்கிறது. 

முழு மனதுடன் தியானம்:

நாம், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றால், கண்டிப்பாக தியானம் செய்ய வேண்டியது அவசியம். மூச்சுப்பயிற்சி மற்றும் நினைவுகளை சரிப்படுத்துவது மிகவும் முக்கியம். இது மன அழுத்தத்தை குறைப்பதோடு, இந்த உலகை இன்னும் தெளிவான கண்களுடன் பார்க்க வைக்கும். 

மேலும் படிக்க | உங்கள் டாக்ஸிக் வேலையை ரிசைன் செய்வதற்கான 5 அறிகுறிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News