'நாம் சீனாவிற்கு தான் வரி கட்டுகிறோம்' - மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!

Rahul Gandhi Speech: இந்தியாவில் தயாரிக்கிறோம் என்று நாம் சொன்னாலும், அது உண்மை அல்ல என்றும் நாம் சீனாவிற்கு தான் வரி செலுத்துகிறோம் என்றும் ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2025, 04:30 PM IST
  • இந்த மொபைல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என கூறப்படுகிறது - ராகுல் காந்தி
  • ஆனால், இதன் உதிரிபாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டது - ராகுல் காந்தி
  • இந்தியாவில் இந்த மொபைல் அசெம்பிள் செய்யப்பட்டதாகும் - ராகுல் காந்தி
'நாம் சீனாவிற்கு தான் வரி கட்டுகிறோம்' - மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி! title=

Rahul Gandhi Speech In Parliament 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே நாட்டின் பொருளாதார அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கடந்த பிப். 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதனை தொடர்ந்து, இன்று (பிப். 3) நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை எழுப்பி அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி பேச்சு: ஜனாதிபதி உரை மீது விமர்சனம்

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நாளை மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். இந்நிலையில், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார். "குடியரசு தலைவர் உரையை வாசிப்பதே எனக்கு சிரமமாக இருந்தது, ஏனென்றால் நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக இருந்த அதே விஷயங்கள்தான் இந்த முறையும் இடம்பெற்றுள்ளது" என சாடினார்.

மேலும் படிக்க | EPFO விதிகள்... வேலையை மாற்றும் ஊழியர்களுக்கு இனி இந்த கவலை இல்லை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தின் பங்கு குறைந்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அவையில் பேசிய அவர்,"இங்கிருப்போர் இதை மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். சில புள்ளிவிவரத்தை பிரதமருக்கு அளிக்க விரும்புகிறேன். Make In India திட்டம் நல்ல யோதனைதான். நாம் அதன்மூலம் வந்த சிலைகள், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், செய்யப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் அனைத்தையும் பார்த்தோம். ஆனால், அதனால் கிடைத்தவை எல்லாம் உங்கள் முன்னரே உள்ளது.

ராகுல் காந்தி பேச்சு: உற்பத்தியில் வீழ்ச்சி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியின் பங்கு 2014ஆம் ஆண்டில் 15.3% ஆக இருந்தது. அது தற்போது 12.6% ஆக குறைந்துவிட்டது. கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவே உற்பத்தியில் குறைவானதாகும். மக்களின் நுகர்வையும் மற்றும் உற்பத்தியையும் ஒழுங்கமைக்க வேண்டும். நுகர்வு சார்ந்த விஷயத்தில் 1990ஆம் ஆண்டில் இருந்து வந்த அனைத்து அரசுகளும் சிறப்பான முன்னெடுப்புகளை செய்துள்ளன. ஆனால், தற்போது நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி என்பதே தோல்வியடைந்திருக்கிறது. 

சீனப் படைகள் நம் நாட்டிற்குள் நுழைந்துவிட்டது என்ற கூற்றை பிரதமர் மோடி மறுத்திருந்தார். ஆனால் நமது ஆயுதப் படைகள் இன்னும் சீனப் படைகளுடன் நம் நாட்டிற்குள் நுழைந்தது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது கேலிக்கூத்தானது அல்ல, ஆனால் ஒரு உண்மை.

ராகுல் காந்தி பேச்சு: அனைத்தும் சீனாவுக்கு சொந்தமானது

சிலர் செயற்கை நுண்ணறிவு குறித்து பேசுகிறார்கள், ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது முற்றிலும் அர்த்தமற்றது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், ஏனெனில் செயற்கை நுண்ணறிவு என்பது தரவுகளின் மூலம் இயங்குகிறது. தரவுகள் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு என்பது ஒன்றுமே இல்லை. இன்றைய தரவைப் பார்த்தால், மிகவும் தெளிவாகத் தெரியும் ஒரு விஷயம் இருக்கிறது.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: சிறப்பம்சங்கள் என்னென்ன?

உலகில் உற்பத்தி முறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு தரவும், இந்த தொலைபேசியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தரவு, மின்சார கார்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தரவு, இன்று உலகத்தில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தரவு என்பது சீனாவுக்குச் சொந்தமானது.

ராகுல் காந்தி பேச்சு: "நாம் சீனாவுக்கு வரி செலுத்துகிறோம்"

உற்பத்தியை ஒழுங்கமைக்க முயற்சிக்கும் சிறந்த நிறுவனங்கள் நம்மிடம் உள்ளன. அடிப்படையில் நாம் செய்தது என்னவென்றால், உற்பத்தியின் அமைப்பை சீனர்களிடம் ஒப்படைத்துள்ளோம்" என விமர்சித்தார். மேலும், அவர் ஒரு மொபைலை கையில் எடுத்து, "இந்த மொபைல் போன், இந்த மொபைல் போனை இந்தியாவில் தயாரிக்கிறோம் என்று நாம் சொன்னாலும், அது உண்மை அல்ல. 

இந்த போன் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. இந்த போன் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும். இந்த போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. நாம் சீனாவிற்கு தான் வரி செலுத்துகிறோம்" என பேசினார். 

ராகுல் காந்தி பேச்சு: வேலையின்மை பெரிய பிரச்னை

மேலும் தொடர்ந்த அவர்,"இப்போது, ​​நம் நாடு வேகமாக வளர்ந்துவிட்டாலும்... நாம் எதிர்கொண்டுள்ள ஒரு உலகளாவிய பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் வேலையின்மை. வேலையின்மை பிரச்சினையை நம்மால் சமாளிக்கவே முடியவில்லை. காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ அல்லது இன்றைய பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசோ இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை வழங்கவில்லை" என பேசியதும் கவனிக்கத்தக்கது. 

மேலும் படிக்க | பட்ஜெட்டில் வந்த அறிவிப்புகள்! இனி இந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News