ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) PF கணக்கை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான க்ளைய்ம்களை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது ஊழியர்கள் தங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் தங்கள் PF கணக்கை ஆன்லைனில் மாற்றலாம். வேலைகளை மாற்றும் ஊழியர்களுக்கு இந்த புதிய விதி பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றத்தின் மூலம் பிஎஃப் கணக்கை மாற்றும் செயல்முறை எளிமையாகிவிடும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் வசதிக்காக விதிகளை திருத்தி அமைத்து வருகிறது. இதனால் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை தாங்களே நிர்வகிக்கலாம். வேலை மாறுபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் EPFO இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆதார் மற்றும் பிற ஆவணங்களின் உதவியுடன் இந்த வேலையை சம்பந்தப்பட்டவர்களே எளிதாக முடிக்க முடியும்.
EPF கணக்கை எளிதாக ட்ரான்ஸ்ஃபர் செய்ய உதவும் சமீபத்திய விதி மாற்றங்களின் கீழ், வேலை மாறும்போது வருங்கால வைப்பு நிதியை மாற்றுவதை EPFO மிகவும் எளிமையாக்கியுள்ளது. மேலும் பணி மாறும்போது உறுப்பினர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை பழைய அல்லது புதிய முதலாளி மூலம் மாற்றும் விதியை இப்போது ரத்து செய்துள்ளது.
உடனடி பரிமாற்றம்: பிஎஃப் கணக்கு ட்ரான்ஸ்ஃபர் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் முதலாளியின் தலையீட்டின் தேவையை நீக்குகிறது.
கணக்கை நிர்வகிக்கும் திறன்: உறுப்பினர்கள் நேரடியாக EPFO போர்ட்டலில் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் திறனைப் பெறுவார்கள்.
சிறந்த வெளிப்படைத்தன்மை: எளிமையான செயல்முறை தெளிவை ஊக்குவிக்கும் மற்றும் முதலாளிகளை சார்ந்திருப்பதை குறைக்கும். ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில் முதலாளிகளின் குறுக்கீடு இருக்காது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணுடன் (யுஏஎன்) இணைக்கப்பட்டு, அக்டோபர் 1, 2017க்குப் பிறகு ஒதுக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளுக்கு, முதலாளியின் தலையீடு இனி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1, 2017க்கு முன் வழங்கப்பட்ட UAN இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட நெறிப்படுத்தப்பட்ட பரிமாற்ற செயல்முறைக்கு, இரண்டு கணக்குகளிலும் ஒரே பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் இருக்க வேண்டும். அக்டோபர் 1, 2017க்கு முன் குறைந்தபட்சம் ஒரு யுஏஎன் ஒதுக்கப்பட்டு, அதே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், வெவ்வேறு யுஏஎன்களுடன் இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடிகளுக்கு இடையே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம். அனைத்து உறுப்பினர் ஐடிகளிலும் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும்.
பிஎஃப் கணக்கை ஆதாருடன் இணைப்பது எப்படி?
1. EPFO உறுப்பினர் இ-சேவா இணையதளத்தைப் பார்வையிடவும்
2.உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
3. 'Manage' மெனுவிற்குச் சென்று 'KYC' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஆதாருக்கான பெட்டியை சரிபார்க்கவும்.
4. உங்களின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயரை உள்ளிடவும்.
5. தகவலைச் சரிபார்ப்பதற்காகச் சமர்ப்பிக்க, 'Save' என்பதைக் கிளிக் செய்யவும்.
6. உங்கள் ஆதார் விவரங்கள் UIDAI பதிவுகளுடன் சரிபார்க்கபடும்.
சரிபார்த்த பிறகு, உங்கள் EPF கணக்குடன் உங்கள் ஆதார் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
ஆன்லைனில் PF கணக்கை மாற்றுவது எப்படி
1. முதலில் EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும். உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் கணக்கில் லாகின் செய்யவும்.
2. இதற்குப் பிறகு, 'Online Services' லிங்கை கிளிக் செய்து 'One EPF Account (Transfer Request)' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. பின்னர், ஏற்கனவே உள்ள PF கணக்கு தொடர்பான விவரங்களை சரிபார்த்த பிறகு, முந்தைய PF கணக்கு விவர விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
4. படிவத்தை வெர்ஃபை செய்ய உங்கள் முந்தைய முதலாளி அல்லது தற்போதைய முதலாளியைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இதற்குப் பிறகு, UAN இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற Get OTP ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
6. OTP உள்ளிட்டு, எக்ஸ்சேஞ்ச் கோரிக்கையை சமர்பிக்க Submit என்பதைக் கிளிக் செய்யவும்.
7. பின்னர், '‘Track Claim Status’ மூலம் க்ளைம் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும்.
8. EPFO UAN போர்ட்டல் மூலம் உங்கள் நிறுவனம் உங்கள் EPF ட்ரான்ஸ்பர் கோரிக்கையை அங்கீகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ