U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியது.
இதில் வெற்றிப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் நடந்தது.
சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்து அதிக டார்கெட் செட் செய்யலாம் என நினைத்த அந்த அணியை இந்திய மகளிர் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
மேலும் படிங்க: முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலியை தட்டி தூக்கிய அந்த 9 பவுலர்கள்!
தொடக்க வீராங்கனை சிமோன் லோரன்ஸ் முதலில் டக் அவுட் ஆக அவரை தொடர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் நடையை கட்டினர். டயாரா ராம்லகன் 3, ஜெம்மா போத்தா 16, கேப்டன் கைலா ரெய்னெக் 7, கரபோ மெசோ 10 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பவுலிங் ஆல் ரவுண்டர் மீகே வான் வூர்ஸ்ட் மட்டுமே அதிகபட்சமாக 23 ரன்கள் அடித்தார்.
அசத்திய இந்திய பந்து வீச்சாளர்கள்
இந்திய அணியில் ஜோஷிதா வி ஜே-வை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டை வீழ்த்தினர். கோங்கடி த்ரிஷா 3 விக்கெட்களும் பருனிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களை கூட தாண்ட முடியாமல் வெறும் 82 ரன்களில் ஆட்டமிழந்தது.
கோப்பையை தக்க வைத்த இந்திய அணி
இதனைத் தொடர்ந்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. இந்த சிறிய இலக்கை இந்திய அணி மிக எளிதாக அடைந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஜி கமலினி மட்டும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கோங்கடி த்ரிஷா 44, சானிகா சல்கே 26 ரன்கள் அடிக்க இந்திய அணி 11.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.
தொடர் நாயகி விருதை கோங்கடி த்ரிஷா தட்டிச் சென்றார். அவர் இத்தொடரில் 265 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் 7 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார். கடந்த முறையும் இந்திய அணியே u19 உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம் இந்திய அணி தற்போது கோப்பை தன்வசம் தக்கவைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ