Gautam Gambhir News Tamil | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடப்போகும் விதம் குறித்து பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அவர் பேசும்போது இரண்டு பிளேயர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தான் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக அந்த தொடரில் இருப்பார்கள் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பிளேயர்கள் யார் என்றால் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான். கடந்த ஆண்டுக்கான பிசிசிஐ விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தான் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த கருத்தை தெரிவித்தார்.
கவுதம் கம்பீர் பேச்சு
பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் பல்வேறு கேள்விகளுக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்தார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பார்ம் குறித்து எழுந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, "இரண்டு பிளேயர்களின் திறமையை நாம் நிச்சயமாக கேள்வி எழுப்ப முடியாது. எல்லா பிளேயர்களுக்கும் இப்படியான காலகட்டம் வரும். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் நிச்சயம் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக வரும் சாம்பியன்ஸ் தொடரில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடுவதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவர்கள் நிச்சயம் செய்வார்கள்." என கூறினார்.
பாகிஸ்தான் போட்டி
அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை நாங்கள் முக்கியமானதாக கருதவில்லை. ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் தொடரையும் நாங்கள் முக்கியமாக பார்க்கிறோம். அந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் கோப்பை கிடைத்துவிடாது. 5 போட்டிகளையும் நீங்கள் வெல்ல வேண்டும். அந்தவகையில் பார்க்கும்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என முனைப்பில் தான் இருக்கிறது. எங்களுக்கு கோப்பை தான் இலக்கு. 50 ஓவர் போட்டியை போன்று சாம்பியன்ஸ் டிராபி கிடையாது. இந்த தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியும் முக்கியம். செய் அல்லது செத்து மடி என்ற நிலையில் நீங்கள் விளையாடி ஆக வேண்டும். இந்திய அணி அப்படியே விளையாடும்" என கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.
மேலும் படிங்க: Naman Awards 2025: எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள்...? முழு லிஸ்ட்a
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ