வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் மக்கானா என்னும் தாமரை விதை

உலர் பழங்கள் வகையை சேர்ந்த தாமரை விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். மக்கானா எனவும் அழௌக்கப்படும் இதில், அடங்கியுள்ள  மருத்துவ குணங்களும் எண்ணிலங்காதவை.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2025, 05:06 PM IST
  • உடலை பிட்டாக வைத்துக் கொள்ள பல வகைகளில் மக்கானா உதவுகிறது.
  • மக்கானா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது
  • நார்ச்சத்து நிறைந்த மக்கானா செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் மக்கானா என்னும் தாமரை விதை title=

2025 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கானா உணவைக் குறிப்பிட்டு, பீகாரில் மக்கானா வாரியம் நிறுவப்படும். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அறிவித்தார். தாமரை விதை என்னும் மக்கானா உலர் பழங்கள் வகையை சேர்ந்தது இது எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால், இதனை சூப்பர்புட் என அழைக்கலாம். கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், ஆக்ஸிஜனேற்றிகள் இதில் அதிக அளவில் உள்ளன. உடலை பிட்டாக வைத்துக் கொள்ள பல வகைகளில் உதவுகிறது. 

மாலையில் சிற்றுண்டிக்கு லைட்டாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், எண்ணெய் இல்லாத வறுத்த மக்கானாவை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்காது. கடந்த சில ஆண்டுகளில், பீகாரின் இந்த சூப்பர்ஃபுட் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும்

வறுத்த மக்கானா என்பது குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்,. இது எடை குறைக்க உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடும் ஆசையை குறைக்கிறது, மேலும் இதுபோன்ற நடைமுறையை தினமும் பின்பற்றினால், எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

 மேலும் படிக்க | வெறும் 5 நிமிட உடற்பயிற்சி போதும்... ஒரே மாதத்தில் தொப்பை எல்லாம் மாயமாய் மறையும்

இதய ஆரோக்கியம்

மக்கானாவில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே, இது இதயத்திற்கு உகந்த உணவாக அமைகிறது. இதில் கூடுதல் எண்ணெய் பயன்படுத்தப்படாததால்,  எண்ணெய் இல்லாமல் பொரிப்பது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு

மகானா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க அனுமதிக்காது. வறுத்த மக்கானாவைச் சாப்பிடுவது சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு  நல்ல உணவு தேர்வாக மாறும்.

எலும்பு ஆரோக்கியம்

மக்கானாவில் நல்ல அளவு கால்சியம் உள்ளது, இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக வயதானவர்கள் எலும்புகள் வலுவாக இருக்க வறுத்த மக்கானாவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்ஷியம் நிறைந்த மக்கானா எலும்புகளை வலுப்படுத்த உதவும். இதனால், மூட்டு வலி ஆஸ்டியோபொரோஸிஸ் போன்ற நோய்களை தடுக்கலாம். தசை விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் மக்கானா  தீர்வை அளிக்கும்.

செரிமான ஆரோக்கியம்

நார்ச்சத்து நிறைந்த மக்கானா செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. லேசான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய சிற்றுண்டியாக இருப்பதால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

முதுமை எதிர்ப்பு பண்புகள் 

மக்கானாவின் முதுமை எதிப்பு பண்புகள் உள்ளன. உங்கள் கூந்தல் மற்றும் சருமத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். சரும சுருக்கங்கள் நீங்கவும் உதவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | எச்சரிக்கை மெல்லக் கொல்லும் பிபி... கட்டுக்குள் வைக்க உதவும் சில பயிற்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News