புதுடெல்லி: உலகில் இசையை விரும்பாதவர்கள் மிகவும் குறைவானவர்களே… கிட்டார், சித்தார், ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதும் பலருக்கு மிகவும் பிடிக்கும். பறவைகளும் இசையில் ஆர்வம் காட்டுகின்றன என்று சொன்னால், நீங்கள் அதை நம்புவீர்களா? பரவாயில்லை, உங்களுக்காக குருவிகளின் வைரலாகும் இசைக் வீடியோவை உங்களுடம் பகிர்ந்துக் கொள்கிறோம்.
பறவைகள் எழுப்பும் ஓசை இனிமையான கீதமாய் நம் மனதை மகிழ்விக்கின்றன.காலையிலும் மாலையிலும் வீடுகளில் பறவைகளின் கீச்சொலிகள் மனதை அமைதிப்படுத்துகின்றன என்றால், சில பறவைகள் எழுப்பும் ஒலியானது, இன்னிசையாகவும் இசைக்கின்றன. வேறுசில பறவைகளின் ஒலி பாடலைப் பாடுவது போல் ஒலிக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படி பல விதமாக கேள்விப்பட்டிருந்தாலும், குருவிகள் கிதார் வாசிப்பதை பார்க்கும் சந்தர்ப்பம் இதுதான் முதல்முறை என்று நினைக்கிறோம்.
குருவிகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இதில் 70 குருவிகள் கொண்ட குழு கிட்டார் வாசிப்பதைக் காணலாம். பறவைகளுக்கு இசையைப் பற்றிய புரிதல் இருப்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
கேமராவில் படம்பிடிக்கப்பட்ட இந்த தருணம் வியப்பளிப்பதாகவும், மனதை மயக்குவதாகவும் இருக்கிறது.
Read Also | Mask-க எடுங்க டாக்டர்: நம்பிக்கையின் சின்னமாய் Viral ஆகும் குழந்தையின் Cute Photo
Zebra Finch வகையைச் சேர்ந்த 70 சிட்டுக்குருவிகள் எலக்ட்ரிக் கிட்டார் சரங்களை ஒன்றாக இணைத்து அற்புதமான இசையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. இந்த வீடியோ ட்விட்டரில் பரவலாக பகிரப்படுகிறது.
ஒரு பெரிய மண்டபத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் சில கித்தார்கள் வைக்கப்பட்டிருப்பதை வீடியோவில் காணலாம். இவை தரையில் இருந்து சிறிது உயரத்தில் வைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. அருகிலுள்ள சுவரில் குருவிகள் அமர்வதற்கான துளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
70 birds naturally playing guitar in random synchronicity is one of my favorite art expos ever made
— Rob N Roll (@thegallowboob) October 15, 2020
கூட்டமாக இருக்கும் குருவிகள் வந்து துளைகளில் அமர்ந்து, கிதார் வாசிக்கின்றன. அவற்றின் இயக்கங்கள் இசையை உருவாக்குகின்றன, அவை ஒலிப்பெருக்கியின் உதவியுடன் அந்த இடம் முழுவதும் எதிரொலிக்கிறது. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு? தென்றலே உனக்கென்ன சொந்த வீடு என்ற பிரபல திரையிசைப் பாடலின் வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. குருவிகளும் கிடார் இசைப்பது மனதில் மட்டுமல்ல, செவிகளிலும் ஆனந்த யாழை மீட்டுகிறது.
Read Also | Aishwarya Sridhar: 2020 வனவிலங்கு புகைப்பட கலைஞர் விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR