7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பழைய டிஏ நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை விடுத்துள்ள ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது.
பழைய அகவிலைப்படி (டிஏ அரியர்) நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மக்களவையில் அரசு அளித்த தகவல்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசு தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், ஊழியர்களின் பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியில் இருந்து ரூ.34,402.32 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பணம் தொற்றுநோயைத் தடுக்க பயன்படுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் வந்தவுடன், மத்திய ஊழியர்களின் டிஏ உயர்வு மூன்று தவணைகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021க்குப் பிறகு, ஜூலை 2021 இல் இந்த முடக்கம் நீக்கப்பட்டு மீண்டும் அகவிலைப்படி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊதியக்கமிஷன் விதிகளில் மாற்றம், ஊதியத்தில் ஏற்றம்
மொத்த அதிகரிப்பு 17%
ஜனவரி 2020, ஜூன் 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய தவணைகளுக்காக அகவிலைப்படி ஒரே முறையில் 17% அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மோடி அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
அகவிலைப்படி முடக்கப்பட்டு அவசர தேவைக்கு தொகை பயன்படுத்தப்பட்டது
FRBM சட்டத்தின் விதிகளை விட தற்போது பட்ஜெட் பற்றாக்குறை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று மக்களவையில் தெளிவுபடுத்தப்பட்டது. எனவே, டிஏ நிலுவைத் தொகையை திரும்ப வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 'தொற்றுநோய்களின் போது, பேரிடரைச் சமாளிக்க அரசு நலத்திட்டங்களைத் தொடங்கியது. இதற்கு பணம் தேவைப்பட்டது. முடக்கப்பட்ட அகவிலைப்படியின் தொகை இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது' என கூறினார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ