கல்யாணத்தில் டான்ஸ்... கடுப்பான மணமகள் திருமணத்தை ரத்து செய்தார்..!!

கல்யாணத்தில்  எல்லாரும் ஆடி பாடுவது வழக்காமான செயல் தான். சந்தோஷத்தை வெளிப்படுத்த, உற்சாக மனநிலையை வெளிப்படுத்த என அனைவரும் டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2020, 08:39 PM IST
  • சந்தோஷத்தை தர வேண்டிய இந்த ஆடல், பாடல், ஒருவருக்கு வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.
  • மணமகளின் குடும்பத்தினர், மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்பதாக காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
  • சந்தோஷமாக நடந்திருக்க வேண்டிய திருமணம், டான்ஸ் பிரச்சனை காரணமாக, நின்று விட்டது.

Trending Photos

கல்யாணத்தில் டான்ஸ்... கடுப்பான மணமகள் திருமணத்தை ரத்து செய்தார்..!! title=

கல்யாணத்தில்  எல்லாரும் ஆடி பாடுவது வழக்காமான செயல் தான். சந்தோஷத்தை வெளிப்படுத்த, உற்சாக மனநிலையை வெளிப்படுத்த என அனைவரும் டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால், சந்தோஷத்தை தர வேண்டிய இந்த ஆடல், பாடல், ஒருவருக்கு வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. 

ஒரு திருமணத்தில், மணமகனின் நண்பர்கள் சிலர் மணமகளை நடன மேடைக்கு வந்து டான்ஸ் ஆட வேண்டும் என்று வற்புறுத்தி இழுத்து சென்றதால் கோபமடைந்த மணமகள், திருமணத்தை நிறுத்தி விட்டாள். 

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமண தம்பதியர், முதுகலை பட்டதாரிகள் இருவரும் உத்தரபிரதேசத்தின் (Uttarpradesh) பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் ஏற்பட்டது

மணமகளின் பெற்றோர், தங்கள் பெண்ணை மதிக்காத ஒரு மனிதருடன் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறினர்.  மணமகளின் தந்தை, “நான் அவளுடைய முடிவை மதிக்கிறேன். அவளை மதிக்காத ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி நான் அவளை கட்டாயப்படுத்த முடியாது. ” என்று கூறினார்.

மேலும், மணமகளின் குடும்பத்தினர், மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்பதாக காவல் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, நிலைமை மேலும் மோசமாகியது.

மணமகனின் பெற்றோர், இந்த புகாரை திரும்ப பெற ரூ .6.5 லட்சம் செலுத்த ஒப்புக்கொண்டனர் எனவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, சந்தோஷமாக நடந்திருக்க வேண்டிய திருமணம், டான்ஸ் பிரச்சனை காரணமாக, நின்று விட்டது. 

ALSO READ | தினம் ₹121 சேமித்தால் போதும்.. செல்ல மகளின் திருமணத்திற்கு கையில் ₹27 லட்சம் ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News