Reasons Why Women Should Never Chase Men : காதல் என்பது, அனைத்து பாலினத்தவருக்கும் வரும் சாதாரண விஷயம். ஆனால், காதலை முதலில் யார் சொல்ல வேண்டும் என்ற கூறப்படாத விதிமுறை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அதில், பெண்கள் முதலில் தங்களது காதலை தெரிவிக்கவே கூடாது என்பது முக்கியமான ஒன்று. இது, பிற்போக்கான கருத்தாக இருந்தாலும், இதில் சில உண்மையும் இருக்கிறது. ஒரு பெண் ஏன் ஆணிடம் காதலை சொல்லக்கூடாது என கூறுகிறோம் தெரியுமா?
சுய மரியாதை:
காதலில் விருப்பம் இல்லாத ஒரு ஆணை தேடித்தேடிச்சென்று ஒரு பெண் தனது காதலையும் பாசத்தையும் தெரிவித்தால், பின்னாளில் அவள் தன்னிடம் தகுதி இல்லாததை போல உணருவாள். எப்போதும் ஒரு உறவு இரு தரப்பினரின் சம்மதத்துடனும் விருப்பத்துடனும்தான் வளர வேண்டும்.
ஆரோக்கியமான உறவாக இருக்காது:
ஒருவரின் ஹெல்தியான உறவு, இருவருக்கும் ஒரே அளவான விருப்பம் இருந்தால்தான் அது சரியான உறவாக இருக்கும். அந்த பெண்ணிற்கு மட்டும் காதல் அதிகமாக இருந்தால், அந்த உறவு எப்போதும் அவள் இதயத்தை உடைக்கும் உறவாகத்தான் இருக்கும்.
இரு தரப்பிலும் முயற்சிகள் இருக்க வேண்டும்:
உறவை காப்பாற்ற, அந்த பெண் மட்டும் எப்போதும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், இன்னொரு பக்கம் அந்த உறவை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சி ஆணிடம் இருக்காது. இதனால், அந்த பெண் மீது, ஆணுக்கு இருக்கும் மதிப்பும்-மரியாதையும் குறைந்து போய்விடும்.
மகிழ்ச்சி இருக்காது:
ஒரு மனிதருக்கு, ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றாலோ, அந்த விஷயம் தனக்கு நெடுங்காலம் தேவை என்றாலோ அதை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்வர். ஆனால், உறவில் அந்த பெண்ணிற்கு மட்டும் எல்லா விருப்பங்களும் இருந்து, அது அந்த ஆணிற்கு இல்லை என்றால், அந்த உறவில் பெண்ணிற்கு மகிழ்ச்சியே இருக்காது.
உண்மையான உணர்வு:
உண்மையான பிடித்தம் அல்லது காதல், இயற்கையாக வரும். அனைத்து காதல் கதைகளும் சரியானதாக இருந்து விடாது. ஆனால், ஒரு உறவு நிலைக்க இருவரிடமும் அந்த காதல் குறித்த உண்மையான உணர்வு இருக்க வேண்டும். “இந்த பெண்ணை விட்டால் வேறு பெண் இல்லை. அதனால் காதலுக்கு ஓகே சொல்லலாம்” என்று கூட சில ஆண்கள் பிடிக்காத காதல் உறவில் இருப்பர். இது போன்றவர்கள், தனக்கு ஏற்ற துணையை எப்போதும் வெளியில் தேடிக்கொண்டுதான் இருப்பர். அவர்கள் அந்த உறவில் காட்டும் உணர்வுகள் எதுவும் உண்மையானதாக இருக்காது. அவர்களுடன் உறவில் இருக்கும் பெண்ணிற்கும் தனிமை உணர்வுதான் அதிகமாக இருக்கும்.
நேரம் வீணாகும்:
பெண்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், அவர் பின்னாடி போவதை விட்டுவிட்டு, தனக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பிக்கலாம். வீணாக, தன்னை பிடிக்காத ஆளை நினைத்து நேரத்தை விணடிப்பதை விட, பயணுள்ள வகையில் தனது நேரத்தை பயன்படுத்தினால், வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். அதை விட, இன்னும் மிகச்சரியான ஆளும் அவர்களின் வாயிற்கதவை வந்து தட்டுவர்.
மேலும் படிக்க | எப்போதும் தூக்க கலக்கமாகவே இருக்கிறதா? ‘இது’ காரணமாக இருக்கலாம்!
மேலும் படிக்க | ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்? ரிப்போர்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ