நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 25, 2018, 03:24 PM IST
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் title=

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீதேவி தான் அடைந்த புகழுக்கு முற்றிலும் தகுதியானவர் என்று தெரிவித்தார். மேலும் மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

Trending News