Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை! முழு விவரம்!

Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு அலைச்சல் மிச்சமாகும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2023, 10:37 AM IST
  • வங்கிகள் மூடப்படும் நாட்களில் 24 மணிநேரமும் ஆன்லைன் சேவைகள் கிடைக்கும்.
  • மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளை மூட இந்திய வங்கிகள் சங்கம் கருதுகிறது.
  • ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை! முழு விவரம்! title=

Bank Holidays: ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது, இந்த புதிய நிதியாண்டில் வரி சீர்திருத்தங்கள், நீட்டிப்புகள் மற்றும் முதலீட்டிற்கான புதிய விதிகளும் அதே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே வங்கிகள் மூடப்பட்டு வந்த நிலையில் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளை மூட இந்திய வங்கிகள் சங்கம் கருதுகிறது.  எனவே மக்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துகொண்டால் அதற்கேற்ப அவர்கள் வங்கி தொடர்பான வேலைகளை செய்துகொள்ளலாம். வங்கிகள் மூடப்படும் நாட்களில் 24 மணிநேரமும் ஆன்லைன் சேவைகள் கிடைக்கும் என்றாலும், சில வேலைகளுக்கு நாம் அவசியம் உள்ளூரிலுள்ள வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

ஏப்ரல் மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டாலும், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள விடுமுறை நாட்கள் வித்தியாசமாக இருக்கும்.  இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை மற்றும் மாநில வாரியான அறிவிப்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.  

- ஏப்ரல் 4-ம் தேதி குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் டெல்லி போன்ற பெரும்பாலான இந்திய மாநிலங்களில் மகாவீர் ஜெயந்திக்காக வங்கிகள் மூடப்படும்.

- ஏப்ரல் 5-ம் தேதி ஜக்ஜீவன் ராம் ஜெயந்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் வங்கிகள் மட்டும் மூடப்படும்.

- ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு போபால், புது டெல்லி, ராய்ப்பூர், ஷில்லாங் மற்றும் சிம்லாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

- ஏப்ரல் 15-ம் தேதி விஷு, போஹாக், பிஹு, பெங்காலி புத்தாண்டு மற்றும் ஹிமாச்சல் தினம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

- ஏப்ரல் 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள வங்கிகள் மட்டும் மூடப்படும்.

- ஏப்ரல் 21-ம் தேதி திரிபுரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் கேரளா வங்கிகள் மூடப்படும்.

மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News