ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்திய ரயில்வேயின் சில முக்கியமான விதிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல விதிகளையும் புதிய வசதிகளையும் கொண்டுவந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் பெறுவது அவசியம். ரயில் டிக்கெட்களை ஆன்லைனிலும், ரயில் நிலையங்களிலும் பெற்று கொள்ள முடியும். நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வேயின் சில முக்கியமான விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால்: ரயில்வேயின் விதிகளின்படி ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அந்த நபருக்கு அதிகபட்சமாக ரூ.1000 அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த அபராத தொகை குறைந்தபட்சம் ரூ 250 ஆக இருக்கலாம்.
வேறு பெட்டியில் பயணம் செய்தால்: ஒரு பயணி தன்னுடைய பெட்டியில் பயணம் செய்யாமல் மற்றொரு பெட்டியில் பயணம் செய்தால் கூடுதல் கட்டணம் TTE ஆல் வசூலிக்கப்படும். ஒரு பயணி ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஏசி கோச்சில் பயணம் செய்கிறார் என்றால், அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ரயிலில் மது அருந்தினால்: ஒருவர் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தால், அவரிடமிருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்படுவார். ஜாக்கிரதை குடிபோதையில் பயணம் செய்பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். மேலும் ரயிலில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் யாராவது புகைபிடித்தால், 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அடையாள அட்டை: ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணத்தின் போது அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை என்றால், அவருக்கு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தார் என்று TTE அபராதம் விதிக்கலாம்.
காரணம் இல்லாமல் சங்கிலி இழுத்தல்: யாரேனும் அவசரம் இன்றி அல்லது சரியான காரணமின்றி ரயிலின் சங்கிலியை இழுத்தால், அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பாதுகாப்பு: பயணிகள் தங்கள் உடமைகளை கவனித்துக்கொள்ளவும், பயணத்தின் போது மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் சக பயணிகளுடன் வாக்குவாதம் அல்லது சண்டைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.
லக்கேஜ்: பயணிகள் ரயிலில் தங்களது பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அதன் எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருக்கக்கூடாது. முதல் ஏசி மற்றும் 2வது ஏசிக்கு 40 கிலோவும், 3வது ஏசி மற்றும் சீட்டுக்கு 35 கிலோவும், ஸ்லீப்பர் கிளாஸ்க்கு 15 கிலோவும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வரம்பு ஆகும். பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
உணவு: பயணிகள் தங்கள் சொந்த உணவை ரயிலில் எடுத்துச் செல்லலாம் அல்லது பிளாட்பாரத்தில் உள்ள பேண்ட்ரி அல்லது உணவுக் கடைகளில் இருந்து உணவை வாங்கி கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ