பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon-ல், கொட்டாங்கச்சி எனப்படும் தேங்காய் ஓடு விற்பனைக்கு வந்துள்ளது.
மனிதகுலத்தின் சோம்பல் காரணமாக வளர்ச்சி கண்டு வரும் ஆன்லைன் விற்பனை தளங்கள் பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்து விட்டது. சமீபத்தில் காலியான முட்டையோடு விற்பனைக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது, இந்நிலையில் தற்போது கொட்டாங்கச்சி எனப்படும் தேங்காய் ஓடு விற்பனைக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
No more decoration : chiratta
അത് മതി(WA forward) pic.twitter.com/fDqLT3NuFr
— Piyu Nair പിയൂ पियू பியு ਪਿਯੂ పియు (@DtPiyu) January 15, 2019
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon தான் கொட்டாங்கச்சி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து, இணைய பிரியர்களின் மத்தியில் கேலி பொருளாய் மாறியுள்ளது.
தற்போது விற்பனைக்கு வந்துள்ள கொட்டாங்கச்சி விலை ₹3000 மட்டும் என குறிக்கப்பட்டுள்ளது. இயற்கை நலன் கொண்ட இந்த கொட்டாங்கச்சி குறித்து பல விளக்கங்கள் அளித்துள்ள Amazon, நெட்டீசன்களின் பலதர விமர்சனங்களுக்கு பின்னர் இந்த பொருளை விற்பனை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. எனினும் கொட்டாங்கச்சி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சில பொருட்களை தற்போது விற்பனையில் தான் வைத்துள்ளது.
குறிப்பாக கொட்டாங்கச்சி கொண்டு தாயாரிக்கப்பட்ட கரண்டி(அகப்பை) ₹460 விலையில் கிடைக்கின்றது. அதேப்போல் இயற்கை எண்ணெய் தடவப்பட்ட கொட்டாங்கச்சி தொகுப்பு விலை ₹400-க்கு கிடைக்கிறது. நேரடி கொட்டாங்கச்சி விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கொட்டாங்கச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டும் தற்போது Amazon விற்பனை செய்து வருகிறது.