Happy Pongal 2023: மகர சங்கராந்தி நாளான இன்று இந்தியா முழுவதும் கலாச்சார முறைப்படி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காப்புக்கட்டு நாள் என்று அழைக்கப்படும் இந்த நாளை லோஹ்ரி என்று வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். தமிழர்களின் தனித்திருநாள் பண்டிகையான பொங்கலுக்கு கட்டியம் கூறும் போகிப் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் போகி பாரம்பரிய வழக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி
விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட இந்தியாவில் இன்று மகர சங்கராந்தி நாளாக பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இன்று பழைய, தேவையில்லாத பொருட்களைக் கழித்து, புதிய பொருட்களை வாங்கி வீட்டிலும், மனதிலும் புத்துணர்வைக் கொண்டு வரும் போகிப் பொங்கல் இது.
பழையன கழிதல்
பழையனப் போக்கி, புதியன ஏற்கும் இந்த நாள் கலாச்சார முறைப்படி கொண்டாடப்படுகிறது. இன்று சபரிமலையில் மகர விளக்கு தீபம் தரிசனம் மிகவும் விசேசமானது. விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்பனை வணங்க உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் புனித மாதம் இது.
மேலும் படிக்க | கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள்
கன்னிமார் வழிபாடு
போகி நாளன்று, வீடுகளை சுத்தப்படுத்தி, வீட்டு தெய்வங்களை வழிபட வேண்டும். வீட்டில் கன்னிமார் என்ற வழிபாடுகள் செய்யும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உண்டு. அதாவது, குடும்பத்தில், திருமணம் ஆகாமல் இறந்துப் போன பெண்களை தெய்வமாக கருதி வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு தொடர்வது வழக்கம். அந்த கன்னிமார் வழிபாடு இன்று செய்வது விசேஷம்.
பொங்கல் 2023
நாளை சூரியனை வழிபட்டு, வரவேற்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு அதற்கு கரைகட்டி வீட்டை அலங்கரிப்பது நமது தமிழர் பாரம்பரியம் ஆகும். கோலமிட்டு, வாயிலில் தோரணங்கள் கட்டி தைத்திருநாளை வரவேற்போம்.
காப்புக்கட்டுவது.
காப்பு கட்டும் நாள்
போகி நாளன்று, ’காப்பு கட்டும்’ வழக்கம் உண்டு. போகிப் பண்டிகையை, காப்புக்கட்டு விழா என்றும் சொல்வதுண்டு. வீடுகளின் வாசற்கதவுகளில், மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி என பல பொருட்களை கட்டி வைப்பார்கள். இவை, மங்கலத்தை அள்ளித்தரும் என்பது நம்ப்பிக்கை.வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும்.
சங்கராந்தி உணவு
போகி அன்று நிலக்கடலை உருண்டை, எள்ளுருண்டை என பலகாரங்களும், மொச்சை, அவரை சேர்த்து உணவுகள் தயாரிப்பதும் வழக்கம். இன்று அரிசி பருப்பு சாதம் மற்றும், பரங்கிக்காய் எனப்படும் பூசணிக்காயை சமைத்து, அதை மாடுகளுக்கு உண்ணக் கொடுப்பது வழக்கம். அதுமட்டுமல்ல, 'நிலைப்பொங்கல்' வைத்து போகி நாளன்று வீட்டு தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொங்கு வட்டாரப் பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜாதகத்தில் சந்திரன் யோகம் நீட்சமாக இருக்கிறதா? 5 விஷயத்தை செய்தால் அருள் பொழிவார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ