மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். குறிப்பாக பெண்களுக்காக சிறந்த வட்டி விகிதத்தில் தொடங்கப்பட்ட வைப்புத் திட்டமாகும் இது. ஏப்ரல் 26 அன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தத் திட்டத்தின் கீழ் தனது கணக்கைத் திறக்க நாடாளுமன்றத் தெருவில் உள்ள தபால் நிலையத்தில் வரிசையில் நின்றதிலிருந்து இந்த திட்டத்துக்கு அதிக கவனம் கிடைத்து, இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இந்த கணக்கைத் திறந்த பிறகு, ஸ்மிருதி இரானி ட்வீட் செய்து இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நீங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் தொடங்கத் தயாராகி இருந்தால், இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து முக்கியமான விஷயங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் எந்த வயதில் இந்த கணக்கைத் திறக்கலாம்?
மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தின் கீழ் எந்தப் பெண்ணும் தனது கணக்கைத் தொடங்கலாம். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். அதாவது, அனைத்து வயது பெண்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இத்திட்டம் கூட்டு வட்டியின் பலனை வழங்குகிறது மற்றும் வட்டியானது காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் அதிக லாபம் கிடைக்கிறது.
இந்த கணக்கை எப்போது திறக்க முடியும்?
இந்த தபால் அலுவலக திட்டம் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 31 மார்ச் 2025 வரை இதில் முதலீடு செய்யலாம். எந்தப் பெண்ணும் இதில் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் அப்டேட்: ஊழியர்களுக்கு இரட்டை குட் நியூஸ்
இந்த கணக்கை திறப்பது எப்படி?
மகிளா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கைத் திறக்க, நீங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகக் கிளைக்குச் செல்ல வேண்டும். இங்கே கணக்கு திறப்பு படிவம்-1 ஐ நிரப்ப வேண்டும். இதனுடன், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற KYC ஆவணங்களின் நகல் மற்றும் பிற தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த திட்டத்தில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன?
இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் வைப்புத்தொகையை வட்டியுடன் திரும்பப் பெறுவீர்கள். ஆனால் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், 1 வருடம் முடிந்த பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த பணத்தில் 40% வரை எடுக்கலாம். அதாவது, 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், ஒரு வருடம் கழித்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்.
ப்ரீ-மெச்யூர் க்ளோஷரின் விதிகள் என்ன?
கணக்கு வைத்திருப்பவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, மகிளா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு மூடப்படும். ஆனால் இந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் 2% குறைக்கப்பட்டு பணம் திரும்ப கிடைக்கும். அதாவது 5.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் வரிச் சலுகைகள் கிடைக்குமா?
அனைத்து தபால் அலுவலக திட்டங்களிலும் வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டத்தில் வரி சலுகைகள் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ