கழுத்தில் ஐ கார்டுடன் கடமையுணர்ச்சிடன் பணியாற்றும் Security Guard பூனை!

2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸால் பலருக்கு வேலையில்லாமல் போன நிலையில்,  ஒரு பூனைக்கு ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது!!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 07:41 PM IST
கழுத்தில் ஐ கார்டுடன் கடமையுணர்ச்சிடன் பணியாற்றும் Security Guard பூனை!   title=

புதுடெல்லி: 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸால் பலருக்கு வேலையில்லாமல் போன நிலையில்,  ஒரு பூனைக்கு ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது! ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிராதா? உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிவிட்டது. 

சிலருக்கு இருக்கும் வேலை போய்விட்டால், சிலர் புதிய வேலைக்காக போராடுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பூனைக்கு மருத்துவமனையில் வேலை கிடைத்த செய்தி விசித்திரமானதாக இருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியும் ஏற்படலாம்.சிலருக்கு இந்த பூனை மிகவும் அதிர்ஷ்டசாலி, என்று பெருமூச்சும் வரலாம்.

உலகில் ஆச்சரியமான மனிதர்களுக்கும் சாகசங்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு விஷயத்திற்காக வெளியே செல்லும்போது பலரை சந்திக்க நேரிடும். அதில் வாழ்க்கையையே திருப்பிப் போடும் சம்பவங்களும், நபர்களும் இருக்கலாம்.  

ஆஸ்திரேலியாவின் (Australia)  ரிச்மண்ட் (Richmond) நகரில் எப்வொர்த் மருத்துவமனை (Epworth Hospital) உள்ளது. இங்குள்ள பாதுகாப்பு குழு தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பூனையை தனது அணியின் ஒரு பகுதியாக நியமித்துள்ளது. இந்த பூனையின் பெயர் எல்வுட் (Elwood). இந்த செய்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேவைகளுக்கு பதிலாக சம்பளம் கொடுப்பது நடைமுறை என்றாலும், பூனைக்கு ரொக்கப் பணத்தையும் கொடுக்க முடியாது, வங்கிக் கணக்கையும் தொடங்க முடியாது என்பதால், ஊதியமில்லா ஊழியராக ஊழியம் செய்கிறது இந்த ஐ-கார்ட் அணிந்த பூனை.

ஆனால் மருத்துவமனை நிர்வாக, பூனையிடம் இருந்து கூட இலவசமாக வேலையை வாங்க விரும்பவில்லை. இந்த செய்தியும் உலக மகா அதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம். மருத்துமனையோ சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன? பூனையின் சேவைகளுக்கு பதிலாக, அதற்கு நல்ல உணவையும் பராமரிப்பும் கொடுக்கலாம் என்று முடிவு செய்து தரமான வாழ்க்கையை வழங்குகிறது. 

அது மட்டுமல்ல, வேலையில் ஈடுபடுத்திய பிறகு, பூனைக்கு ஒரு ஐ-கார்டும் வழங்கப்பட்டது, அதில் பூனையின் புகைப்படம், பெயர் மற்றும் பாதுகாப்பு காவலர் என்றும் எழுதப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பூனை, மருத்துவமனையின் பிரதான வாயிலில் பணியமர்த்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானவர்கள், பூனை பணி செய்வதைக் கண்டு புன்னகை பூக்கம் முகத்துடன் செல்கிறார்கள்.

இந்த பூனை கடந்த ஒரு வருடமாக மருத்துவமனை வளாகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. எனவே, பாதுகாப்பு குழுவில் ஒரு பணியாளராக  Elwood பணியில் சேர்க்கப்பட்டார். தனது பணியை பூனை சப்தமில்லாமல் ஆனால் சரியாக செய்து வருவது மற்றுமொரு ஆச்சரியம்!  

Also Read | இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் அதிசயம்! காரணம் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News