IND vs ENG: முதல் டி20இல் ஷமி ஏன் விளையாடவில்லை தெரியுமா...?

India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷமி சேர்க்கப்படாதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2025, 08:58 PM IST
  • இந்திய அணியில் 3 ஸ்பின்னர்களுக்கு இன்று வாய்ப்பு
  • அர்ஷ்தீப் சிங் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக உள்ளார்.
  • ஜாஸ் பட்லர் அரைசதம் கடந்து அதிரடி
IND vs ENG: முதல் டி20இல் ஷமி ஏன் விளையாடவில்லை தெரியுமா...? title=

India vs England 1st T20 Latest News Updates: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில், முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

IND vs ENG: 132 ரன்களில் ஆல்-அவுட்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 68 ரன்களை அடித்தார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பில் சால்ட் 0, பென் டக்கெட் 4, ஹாரி ப்ரூக் 17, லியம் லிவிங்ஸ்டன் 0, ஜேக்கப் பெத்தல் 7, ஜேமி ஓவர்டன் 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 132 ரன்களில் சுருண்டது. ஜோப்ரா ஆர்ச்சர் 12, அடில் ரஷித் 8 ரன்கள் என கடைசி கட்டத்தில் சற்று தாக்குப்பிடித்து 20 ஓவர்கள் வரை இங்கிலாந்தை அழைத்து வந்தார்கள்.

IND vs ENG: அர்ஷ்தீப் மட்டுமே 

இதுஒருபுறம் இருக்க, இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. பலரும் எதிர்பார்த்தது போலவே பிளேயிங் லெவனில் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெற்றுள்ளார். அக்சர் பட்டேலுடன் ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி என 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இதனால் அர்ஷ்தீப் சிங் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். 

மேலும் படிக்க | மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!

மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷமியை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவராதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஹர்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் அதிகமாக ரன்களை லீக் செய்கிறார். நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் ஷமியை முயற்சித்து பார்த்திருக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

IND vs ENG: ஏன் ஷமி விளையாடவில்லை?

இருப்பினும், ஷமியை இந்த போட்டியில் எடுக்காதது சரியான முடிவுதான். நம்பர் 8 வரை பேட்டிங் வேண்டும் என்பதால் தற்போதைய காம்பினேஷனை சூர்யகுமார் - கம்பீர் விரும்பியிருக்கலாம். அதுமட்டுமின்றி, 2026 உலகக் கோப்பை தொடருக்கான திட்டத்தில் நிச்சயமாக ஷமி இல்லை. அவரை தற்போது இந்த தொடரில் சேர்த்திருப்பதற்கு முக்கிய காரணம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நல்ல ரிதம் கிடைக்க வேண்டும், காயத்தில் இருந்து வந்த உடன் சில போட்டிகளை விளையாட வேண்டும் என்பதற்குதான். அப்படியிருக்க, அவர் இந்த தொடரில் 3ஆவது போட்டி அல்லது அதற்கு பிறகான போட்டிகளில் விளையாடுவார் எனலாம். தொடக்க கட்ட போட்டிகளில் அவர் விளையாடாதது சரியான முடிவே. 

மேலும் படிக்க | ஜடேஜாவிற்காக சண்டைக்கு நின்ற அஸ்வின்! சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News