IIT Madras Director Kamakodi, Latest News Updates: ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை அடிப்படையில் கோமியம் குறித்து தான் பேசியதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி இன்று தெரிவித்தார். மேலும் தங்களின் பண்டிகையில் பஞ்ச கவ்யம் சாப்பிடும் வழக்கம் இருப்பதால் தானும் சாப்பிடுவதாகவும் கூறினார்.
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியம் குறித்து சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் கூறுகையில்,"கோமியத்தில் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் இருக்கிறதா என்பதற்கு ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகளை அளிக்கிறேன். அமெரிக்காவில் உள்ள நேச்சர் இதழ் இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
'அறிவியல்பூர்வமான நிரூபணம்'
மேலும் கோமியத்தின் தயாரிப்பிற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். அதுதான் அன்றைய நிகழ்ச்சியில் கூறினேன். ஆன்ட்டி பங்கல், ஆன்ட்டி இன்பர்மேட்டிவ், பாக்டீரியாஸ் இருப்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அன்று பேசும்போது அறிவியலும் பசுவும் பற்றி கேட்டனர். அப்பொது இயற்கை விவசாயம், பசு சாணத்தின் மூலம் கிடைக்கப்படும் எரிவாயு உள்ளிட்ட சில பிரிவுகளில் பேசினேன்.
மேலும் படிக்க | பீகாரில் சபாநாயகர்கள் மாநாடு... திடீரென அப்பாவு வெளிநடப்பு - என்ன காரணம்?
அமேசானில் பஞ்ச காவியம் என்ற பொருளும் விற்பனை செய்து வருகின்றனர். மருத்துவ அறிவியல் ரீதியாகவும் அனுமதி பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தை பொருத்தவரை அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. முழுவதும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'நான் பஞ்ச கவ்யம் சாப்பிடுவேன்'
அமெரிக்காவில் உள்ள முதல் 10 இதழ்களில் ஒன்றில் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது . அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளதை தான் கூறியுள்ளேன். இந்தியன் ஸ்கூல் ஆஃப் மெடிசன் இதுகுறித்தும் ஆய்வு செய்து தெரிவிக்கலாம். சென்னை ஐஐடியில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் துறையில் விருப்பப்படுபவர்கள் இது குறித்தும் ஆய்வு செய்யலாம். எங்களுக்கு சில பண்டிகைகள் உள்ளது. அந்த பண்டிகைகளின் போது பஞ்ச கோமியம் சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. நான் பஞ்ச கவ்யம் சாப்பிடுவேன்" என தெரிவித்தார்.
மேலும், "கோமியம் ஆபத்தானது என்பது பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியானதாக சமூக வலைதளங்களில் வருகின்றன. எனக்கு அவை பற்றி தெரியாது. ஆனால் நான் குறிப்பிடும் அமெரிக்காவின் நேச்சர் இதழில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆதாரம் இருக்கிறது. இந்த கட்டுரையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர் என்பதையும் கூறி உள்ளனர்" என்றும் தெரிவித்தார்.
மனோ தங்கராஜ் கேள்வி
இதுகுறித்து முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்,"இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை IIT இயக்குனர் காமகோடி அவர்கள் மறுக்கிறாரா?.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை IIT இயக்குனர் காமகோடி அவர்கள் மறுக்கிறாரா?
மாடு மட்டுமல்ல மனிதன், ஆடு, எருமை, ஒட்டகம் உட்பட பல… https://t.co/P7EWdsNN1I
— Mano Thangaraj (@Manothangaraj) January 20, 2025
மாடு மட்டுமல்ல மனிதன், ஆடு, எருமை, ஒட்டகம் உட்பட பல விலங்குகளின் எச்சில், வியர்வை, சிறுநீர் கழிவுகளிலும் கூட சில நல்லகூறுகள் இருப்பதாகத்தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பல தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளும் அவற்றில் அடங்கி இருக்கின்றன என்று தான் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன" என கேள்வி எழுப்பி உள்ளார். இதேபோல் பலரும் காமகோடியின் பேச்சுக்கு தங்களின் எதிர்ப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ