IND vs ENG T20 Series, Team India Playing XI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை மறுதினம் (ஜன. 22) கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. அதை தொடர்ந்து, ஜன. 25இல் சென்னையிலும், ஜன. 28இல் ராஜ்கோட்டிலும், ஜன. 31இல் புனேவிலும், பிப்.2இல் மும்பையிலும் டி20 போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இலங்கையிலும், தென்னாப்பிரிக்காவிலும் பட்டையை கிளப்பிய இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் பலமான இங்கிலாந்து அணியை போட்டுத் தாக்க காத்திருக்கிறது. இங்கிலாந்து டி20 அணியை எடுத்துக்கொண்டால் ஜாஸ் பட்லர் தலைமையில் ஹாரி ப்ரூக், பென் டக்கெட், பில் சால்ட், ஜேக்கப் பெத்தெல், லியம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் என பலமான பேட்டர்களை இருந்தாலும் பந்துவீச்சு படையும் சிறப்பாகவே உள்ளது.
IND vs ENG T20: சமாளிக்குமா இந்திய அணி?
அதிலும் சுழற்பந்துவீச்சில் ரெஹ்மன் அகமது மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸே, மார்க் வுட், ஜேமி ஓவர்டன், ஷகிப் மகமுத் ஆகியோர் உள்ளனர். இவர்களில் பலருக்கும் ஐபிஎல் அனுபவமும் இருக்கிறதால் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | "ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" - சுரேஷ் ரெய்னா!
இருப்பினும் இந்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி எந்த காம்பினேஷனை கையில் எடுக்கும் என்பதும் முக்கியமாகும். அந்த வகையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதையும் இங்கு காணலாம்.
IND vs ENG T20: இதுதான் இந்திய அணியின் பிளேயிங் லெவன்?
கண்டிப்பாக இந்திய அணி, அதன் டாப் 8இல் மாற்றம் செய்யப்போவதில்லை. அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் டி20இல் விளையாடுவார்கள். அடுத்து மிடில்-ஆர்டரில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அப்படியே இருப்பார்கள்.
பின்வரிசையில் ரின்கு சிங், அக்சர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இருப்பார்கள். பிரீமியம் பந்துவீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள். அப்படியிருக்க, ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரேல், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேக்-அப் வீரர்களாக இருப்பார்கள்.
IND vs ENG T20: ஏன் இந்த பிளேயிங் லெவன்?
ஏனென்றால், டாப் ஆர்டரில் சிறப்பான இடது - வலது காம்பினேஷன் கிடைக்கிறது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா தென்னாப்பிரிக்காவில் உச்சக்கட்ட பார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவை இந்திய மண்ணில் தடுப்பது சாதாரணமானது அல்லது. முதல் நான்கு வீரர்களிலேயே விக்கெட் கீப்பரும் வந்துவிடுகிறார். உங்களுக்கு பார்ட்-டைம் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.
அடுத்து ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இருப்பார்கள். இதில் இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள், ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிடைக்கின்றனர்.
அடுத்து வருண் சக்ரவர்த்தி மிஷ்ட்ரி ஸ்பின்னராக உள்ளே வருவார். இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு அர்ஷ்தீப் மற்றும் வலதுகை வேகப்பந்துவீச்சுக்கு முகமது ஷமி பக்காவாக இருப்பார்கள். ஒருவேளை தொடரை வெல்லும்பட்சத்தில், கடைசி சில போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டது. பேக்-அப் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனலாம்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இடமில்லை, விரைவில் ஓய்வை அறிவிக்கப்போகும் ஸ்டார் பவுலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ