மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது மாற்றம்? இனி ரூ.1000 இல்லை?

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ. 1,000 உரிமையைப் பெறுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2025, 07:49 AM IST
  • மகளிர் உரிமைத்தொகையில் அப்டேட்?
  • இனிமேல் ரூ.1000 இல்லையா?
  • தமிழக அரசின் புதிய திட்டம்!
மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது மாற்றம்? இனி ரூ.1000 இல்லை? title=

வரும் காலத்தில் மகளிர் உரிமை தொகையில் சில மாற்றங்களை செய்ய தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மகளிர் உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது இவ்வாறு கூறினார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் தங்கள் உரிமைகளை முழுமையாகப் பெறுவதை உறுதி செய்வதில் அரசின் நிலைப்பாட்டை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க | TN Rain Alert: மக்களே குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

மகளிர் உரிமை தொகை அப்டேட்

சில பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், அப்ளை செய்வதில் சில சிரமங்கள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தற்போது, ​​முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல ஏற்கனவே ஓய்வூதியம் வாங்கும் பெண்களுக்கும், அரசாங்க பலன்களை பெறும் பெண்களுக்கும் இந்த திட்டத்தில் உரிமை தொகை கொடுக்கப்படவில்லை.

வரும் காலத்தில் பிற அரசாங்க நிதிகளுக்கு தகுதி பெற்ற பெண்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்களை உடனடியாக செயல்படுத்த முடியாது என்றாலும், திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரலாம். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதிப் பட்டியலில் விடுபட்ட நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு?

வரும் பட்ஜெட்டில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக போன்ற அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு ரூ. 1500 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முயற்சிக்கு முன்னோடியாக இருந்த தமிழகம் தற்போது ரூ. 1,000 மட்டுமே வழங்குகிறது. தேர்தல் சமயத்தில் தமிழக அரசும் இதைப் பின்பற்றலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆளும் திமுக கட்சி இந்த தொகையை ரூ.1500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்த பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் கடும் போட்டி போடும் என்பதால் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகலாம்.

மேலும் படிக்க | பீகாரில் சபாநாயகர்கள் மாநாடு... திடீரென அப்பாவு வெளிநடப்பு - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News