ஆட்டம் காட்டிய அபிஷேக் சர்மா... அடங்கியது இங்கிலாந்து - மிரட்டலான வெற்றி!

IND vs ENG 1st T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 முன்னிலை பெற்றுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2025, 10:42 PM IST
  • அபிஷேக் சர்மா 79 ரன்களை குவித்தார்.
  • சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.
  • 13ஆவது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆட்டம் காட்டிய அபிஷேக் சர்மா... அடங்கியது இங்கிலாந்து - மிரட்டலான வெற்றி! title=

IND vs ENG 1st T20 Latest News Updates: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இந்திய அணியில் பலரும் எதிர்பார்த்த ஷமி இன்று விளையாடவில்லை. அர்ஷ்தீப் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார். மூன்று ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தது. மறுபுறம், அடில் ரஷீத் மட்டுமே இங்கிலாந்துக்கு பிரீமியம் ஸ்பின்னர், லியம் லிவிங்ஸ்டன் பார்ட் டைம் ஸ்பின்னராக இருந்தார். மற்ற அனைவருமே வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.

IND vs ENG: போராடிய பட்லர்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அர்ஷ்தீப் சிங்கின் வேகத்திலும், வருண் சக்ரவர்த்தியின் சுழலிலும் டாப் ஆர்டர் காலியானது. பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா அதிக ரன்களை கொடுத்த நிலையில், பவர்பிளேவுக்கு பின் தனது இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரை ஒரே ஓவரில் வருண் சக்ரவர்த்தி ஆட்டமிழக்கச் செய்தது பெரும் திருப்பத்தை உண்டாக்கியது.

மேலும் படிக்க | மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!

IND vs ENG: அசத்திய வருண் சக்ரவர்த்தி

அதிரடி காண்பித்த ஜாஸ் பட்லரும் வருண் சக்ரவர்த்தி பந்தில் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 138 ரன்களில் ஆல்-அவுட்டானது. வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

IND vs ENG: இந்தியாவின் அதிரடி தொடக்கம்

133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கினாலும், பவர்பிளே ஓவரில் ஆர்ச்சர் இந்திய அணி ஓப்பனர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இருப்பினும் கஸ் அட்கின்சன் வீசிய இரண்டாவது ஓவரில் சஞ்சு சாம்சன் வெறியாட்டம் காட்டினார். நான்கு பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 22 ரன்களை சஞ்சு சாம்சன் அந்த ஓவரில் அடித்தார். மறுபுறம் ஆர்ச்சர் பவர்பிளேவில் 3 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டும் கொடுத்து சஞ்சு மற்றும் சூர்யகுமார் விக்கெட்டுகளை கைப்பற்றினார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் 18 ரன்களை குவிக்க 6 ஓவர்களில் 63 ரன்களை இந்தியா எடுத்தது, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

IND vs ENG: அடுத்த போட்டி எப்போது?

அதன்பின் அபிஷேக் சர்மா சரவெடியாக வெடித்தார். அடில் ரஷித் வீசிய 8வது ஓவரில் 16 ரன்கள், ஓவர்டன் வீசிய 9வது ஓவரில் 10 ரன்களை அடிக்க அபிஷேக் சர்மா அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா, 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை அடித்து 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியும் 12.5 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார். அடுத்த டி20 போட்டி வரும் ஜன. 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஆனா - மனம் திறந்த முகமது ஷமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News