பிலவ, ஆனி 1ம் நாள் (2021 June, 15): இன்றைய உங்கள் ராசி பலன் எப்படி இருக்கும்

எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 06:16 AM IST
  • ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
  • தொழில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
  • வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பிலவ, ஆனி 1ம் நாள் (2021 June, 15): இன்றைய உங்கள் ராசி பலன் எப்படி இருக்கும் title=

ராசிபலன் - 15-06-2021

மேஷம்
முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வீடு மற்றும் மனைகளின் மூலம் எதிர்பாராத விரயங்கள் நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.

பரணி : விரயங்கள் நேரிடும்.

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

ரிஷபம்

பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். புதிய மின்னணு பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். கலைநயமான சிந்தனைகள் மேம்படும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும்.

கிருத்திகை : இன்னல்கள் நீங்கும்.

ரோகிணி : பொறுப்புகள் குறையும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் நேரிடும். வாகனம் தொடர்பான பயணங்களின்போது தகுந்த கோப்புகளை கையாளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : காலதாமதம் நேரிடும்.

திருவாதிரை : மாற்றமான நாள்.

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : இழுபறிகள் நீங்கும்.

பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

மகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னி
அரசு தொடர்பான காரியங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் பலரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும்.

உத்திரம் : பொறுமை வேண்டும்.

அஸ்தம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
துலாம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

சுவாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

விருச்சகம்

எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமாக அமையும். போட்டி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

விசாகம் : சேமிப்புகள் குறையும்.

அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.

கேட்டை : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

தனுசு

நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தந்தையிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் ஈடுபட வேண்டும். உத்தியோகம் தொடர்பான சில விஷயங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், ஒற்றுமையும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டார நட்புகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

குடும்ப நபர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

மீனம்

மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : இன்னல்கள் குறையும்.

Trending News