உடன் வேலை பார்ப்பவர்களுடன் சண்டையா? அதை ‘இப்படி’ சமாளிக்கலாம்..

நம்முடன் வேலை பார்ப்பவர்களுடன் நாம் எப்போதாவது சண்டை போட்டு விடுவதுண்டு. அவர்களுடன் சண்டை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 1, 2024, 05:00 PM IST
  • அலுவலகத்தில் சண்டை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
  • அந்த சண்டையை தீர்ப்பது எப்படி?
  • இதோ சில டிப்ஸ்!
உடன் வேலை பார்ப்பவர்களுடன் சண்டையா? அதை ‘இப்படி’ சமாளிக்கலாம்.. title=

நம்மில் பலர், வீட்டில் இருக்கும் நேரத்தை விட அலுவலகத்தில் இருக்கும் நேரமே அதிகமாக இருக்கிறது. இதனால், குடும்பத்தினரின் முகங்களை அதிகமாக முழிப்பதை விட, உடன் வேலை பார்ப்பவர்களின் முகத்திலேயே பெரும்பாலும் முழிக்கிறோம். வழக்கமாக நாம் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது, பிறரிடம் பேசி பழகி நண்பராவது வேறு. ஆனால், அலுவலகத்தில் நாம் பிறரை அணுகும் முறையும், அவர்களை நண்பர்களாக்கி கொள்வதும் எப்போதும் நன்மையில் முடிந்து விடாது. ஒரே இடத்தில் வேலை பார்க்கும் போது, பல சமயங்களில் பிறருடன் கருத்து மோதல்கள் வரலாம், கருத்து வேறுபாடு ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில், தினமும் அவர்களின் முகத்தில் முழிப்பது என்பது கடினமானதாக இருக்கும். அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

நேரம் ஒதுக்குங்கள்:

எந்த சண்டையாக இருந்தாலும், அதன் தாக்கம் குறையும் வரை, அது உங்களை விட்டு கடந்து போகும் வரை அதற்கு நேரம் ஒதுக்குங்கள். இது குறித்து ஏதேனும் முடிவெடுப்பதற்கு முன்னர், நன்கு ஆலோசனை செய்து பின்னர் செயல்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் ஆரப்போட்டால் மட்டுமே அது சரியாகும். 

மோதலைப் பற்றி சிந்தியுங்கள்:

உங்களுடன் பணிபுரிபவர்களுடன் ஏன் சண்டை ஏற்பட்டது என்பது குறித்தும், அந்த சண்டைக்கு யார் காரணம் என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் மட்டுமே, இருவரது பக்கங்களில் இருந்தும் என்ன நடந்தது என்பதை பார்க்க முடியும். மேலும், சண்டையை முடிக்க நீங்கள் திட்டமிட்டாலும் அது குறித்து சரியாக பேச இது வழிவகுக்கும்.

பேச முயற்சி செய்யுங்கள்:

இந்த சண்டை குறித்து பேச முடிவு எடுக்கும் போது சண்டை போட்ட நபரிடம் மெதுவாக சென்று பேசவும். சண்டை போட்டது தெரியக்கூடாது என்பதற்காக, எதுவுமே நடக்காதது போல அவர்களிடம் பேசக்கூடாது. அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு விஷயத்தில் இருந்து பேச ஆரம்பிக்க வேண்டும். ஜோக் சொல்வது மூலமாகவும், அவர்களை பற்றி விசாரிப்பது மூலமாகவும் பேச்சை ஆரம்பிக்கலாம். 

மன்னிப்பு:

சண்டையில், தவறு உங்கள் மீது என்று தெரிந்துவிட்டால் முதலில் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இது, ஒரு உறவை ஒட்டவைக்க உதவும் ஒரு பெரிய கருவியாகும். அவர் மீது தவறு இருந்தால், அவர் பேச்சில் எது உங்களை காயப்படுத்தியது என்பதையும் அது உங்களை எப்படி பாதித்தது என்பது குறித்தும் நீங்கள் கூற வேண்டும். 

வேலையில் கவனம்:

சண்டையிட்ட இருவரும் ஒரே டீமை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், சண்டைக்கு பிறகு இருவரது பணியிலும் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். எந்த சண்டையாக இருந்தாலும், வேலைக்காக ஒருவருடன் ஒருவர் பேசிதான் ஆக வேண்டும் என்றால், உங்கள் தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேச வேண்டும். 

எல்லைகள்:

ஒரு இடத்தில் சண்டை வருகிறது என்றால், ஒருவருக்கு பிடிக்காத விஷயத்தை, அவர் பலமுறை கூறியும் இன்னொருவர் செய்திருப்பார். அப்படி ஒருவர் தன்னிடம் விதித்த எல்லையை இன்னொருவர் மீறும் போதுதான் சண்டை ஏற்படும்.  வருங்காலத்தில் இது போன்று நடப்பதை தவிர்க்க, நீங்கள் பிறரிடம் வைத்திருக்கும் எல்லைகளை, அப்படியே கட்டிக்காப்பது மிகவும் நல்லதாகும்.

மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!

ஆதரவு:

உங்கள் இருவருக்குள் ஏற்பட்டது பெரிய சண்டை என்றால், உங்களின் மேலாளரிடம் (HR) இதை கொண்டு போகலாம். அவர்களிடம் நடந்ததை கூறி, இந்த பிரச்சனையை தீர்க்க வழி கேட்கலாம்.

பாசிடிவாக இருக்க வேண்டும்:

இருவருக்குள் நடக்கும் சண்டையினால், ஆதாயம் பெறுபவர்கள் பலர் இருப்பர். எனவே, அவர்கள் பயன்படுத்தும் பகடைக்காயாக நீங்கள் ஆகிவிட கூடாது. ஒருவருடன் சண்டை ஏற்பட்டாலும், உங்களை சுற்றி இருக்கும் பிறர் உங்களுடன் வேலை பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எனவே, இது உங்களை பாதிக்காமல் இருக்க பாசிடிவான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

கடந்து போகும்:

நல்ல காலமாக இருந்தாலும், கெட்ட காலமாக இருந்தாலும் அது நம்மை கடந்து போகும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த சண்டை மட்டுமல்ல, இன்னும் இது போல பல சண்டைகள் வந்தாலும், அதை நீங்கள் கடந்து செல்வீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இந்த காலத்து பெண்கள் திருமணம் செய்ய விரும்பாதது ஏன்? காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News