AC Side Effects in Summer: கோடைகாலத்தில் ஏசியின் தேவை அதிகளவில் இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் ஏசியை தேடி ஓடுகின்றனர். இந்த கோடைகாலத்தில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வீட்டில் ஏசியை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பொதுவாக ஏசியை 12 முதல் 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இயக்கக்கூடாது. ஏசியை அதிகம் ஹீட் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்து வைத்து கொள்ள வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அவ்வப்போது ஏசி பில்டரை கிளீன் செய்வது நல்லது.
மேலும் படிக்க | வந்தே பாரத்தின் வேகம் குறைகிறதா... உண்மை நிலை என்ன..!!
ஏசியை தொடர்ந்து பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஏனெனில், வெப்பம் அதிகரித்து ஏசியில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதன் காரணமாக பலரும் கவலையிலும் உள்ளனர். எனவே, ஏசியை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏசி மட்டும் இல்லை, எந்த ஒரு இயந்திரத்தையும் அதிக நேரம் இயக்கினால் அது சூடாகும். சில சமயங்களில் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு நாளில் நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தி இருந்தால், சிறிது நேரம் அதற்கு ஓய்வு கொடுப்பது நல்லது. இல்லை என்றால் ஏசி உங்களுக்கு நிறைய சிரமங்களைத் தரும்.
தொடர்ந்து ஏசியை இயக்கினால் ஏற்படும் பாதிப்புகள்
ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்தினால் அதில் உள்ள கம்ப்ரசர் மற்றும் கன்டென்சரில் பிரச்சனைகள் ஏற்பட்டு தீ பிடிக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இருக்க கூடிய வீடுகளில் நாள் முழுவதும் ஏசி இடைவிடாது இயங்கும். இதனால் கரண்ட் பில்லும் அதிகமாகும், அதே சமயம் பாதிப்பும் அதிகம் உள்ளது. நீண்ட நேரம் ஏசி ஓடினால் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏசியின் வெளிப்புற யூனிட்டை சுற்றி சரியான காற்றோட்டம் இல்லை என்றால் வெப்பம் வெளியேற முடியாது. இதன் காரணமாக ஷார்ட் சர்க்யூட் அல்லது வயரிங்கில் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதே போல ஏசி ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று அதிக பவர் சப்ளை வந்தால் கன்டென்சரில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிப்பது?
வீட்டில் தினசரி அதிக நேரம் ஏசியை பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு 5-6 மணி நேரத்திற்கும் பிறகு 30 நிமிடங்கள் அதற்கு ஓய்வு கொடுங்கள். ஏசியின் வெளிப்புற யூனிட் அதிகம் சூடாகாமல் பார்த்து கொள்வது நல்லது. ஏசியின் வெளிப்புற யூனிட்டில் இருந்து வரும் சூடான வெப்பம் வெளியேற நல்ல காற்றோட்டம் தேவை. மேலும் அடிக்கடி ஏசியின் பில்டரை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பொதுவாக 10 நாட்களுக்கு ஒருமுறை ஏசி ஃபில்டரை சுத்தம் செய்வது நல்லது. உங்கள் ஏசியில் ஏதாவது சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சர்வீஸ் செய்து கொள்ளுங்கள். அதே போல ஏசிக்கு மின்சாரம் வரும் வயரிங் நல்ல முறையில் இருப்பது அவசியம். மேலும் நல்ல தரமான சாக்கெட்டுகள் மற்றும் பிளக்குகளைப் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ