ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Nov 4, 2024, 06:28 AM IST
    அஸ்வின்-ரோஹித் படிப்படியாக வெளியேற்றப்படலாம்.
    விராட் கோலியும் அதே நிலையில் தான் உள்ளார்.
    பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பின் முடிவு.
ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு! title=

கடந்த 3 வாரமாக இந்திய அணிக்கு சில கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு இந்திய அணி மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வொயிட்-வாஷ் செய்துள்ளது. பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ளளது. மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் வொயிட்-வாஷ் ஆவதும் இதுவே முதல் முறை. இதனால் அணியில் உள்ள சில சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளது.

மேலும் படிக்க | CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா... இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் - ஏலத்தில் தூக்க பிளான்!

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு மும்பை டெஸ்ட் போட்டி தான் கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டியாக இருக்கலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ரன்கள் அடிக்காதது பெரும் ஏமாற்றத்தை தந்தது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், சீனியர் வீரர்கள் அணியிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம்?

ரோஹித், விராட், ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அஸ்வின் தற்சமயம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இனி வரும் தொடர்களில் வீரர்கள் தேர்வு குறித்து ​​தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே சில காரசார விவாதம் நடக்கலாம். "நிச்சயம் அணியில் பெரிய மாற்றம் இருக்கும். பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி நவம்பர் 10ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் மாற்றம் செய்ய முடியாது. ஆஸ்திரேலியா தொடர் சில வீரர்களுக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றது.

"உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால் ரோஹித், விராட், ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு சூப்பர் சீனியர்களும் இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். BGT தொடரின் முடிவு தான் அவர்களின் எதிர்காலம். ஒருவேளை மும்பை டெஸ்ட் தான் அந்த நான்கு பேரின் கடைசி சொந்த டெஸ்டில் ஒன்றாக இருக்கலாம்” என்று மேலும் கூறினார். இந்திய அணி ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற அணிகளின் உதவி இல்லாமல் நேரடியாக WTC இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் இது சாத்தியமற்ற ஒன்று தான்.

சீனியர் வீரர்களால் வாய்ப்புக்காக காத்திருக்கும் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும், அஷ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் தனது இடத்தை டெஸ்ட் அணியில் தக்க வைத்துள்ளார். ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல் ரெடியாக உள்ளார். ரோஹித் சர்மாவிற்கு பதில் அபிமன்யு ஈஸ்வரனும், விராட் கோலிக்கு பதில் ருதுராஜ் கைகுவாட்வும் உள்ளனர். 

மேலும் படிக்க | IPL 2025: 10 அணிகள் தக்கவைத்த வீரர்கள்... கையில் இருக்கும் RTM, ஏலத்தொகை - அனைத்தும் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News