ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. ஏப்ரல் 1, 2022 முதல் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஜூன் 30, 2022க்கு முன் ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தால் ரூ.500 கட்டணம் விதிக்கப்படும், அவ்வாறு அந்த தேதிக்குள் இணைக்காமல் விட்டவர்கள், ஜூலை 1, 2022க்கு பிறகு இணைத்தால் இந்த கட்டண தொகை இரட்டிப்பாகும். ஆதார்-பான் இணைக்கும் செயல்முறையை முடிக்க, ஜூலை 1 முதல் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இந்த வங்கியில் எஃப்டிகளுக்கு 7.99 சதவீதம் வரை வட்டி தருதாம்
அதில், வரி செலுத்துவோர் 31 மார்ச் 2023 வரை ஆதார்-பான் இணைப்புக்கு எவ்வித விளைவுகளையும் சந்திக்காமல் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரி செலுத்துவோர் 1 ஏப்ரல் 2022 முதல் மூன்று மாதங்கள் வரை ரூ.500 மற்றும் அதற்குப் பிறகு ரூ.1000 கட்டணம் செலுத்தி, தங்கள் ஆதாரை இணைக்க வேண்டும். சலான் எண் ஐடிஎன்எஸ் 280ஐப் பயன்படுத்தி சலான் செலுத்த வேண்டும். ஆதார் பான் இணைப்பு செயல்முறையை மார்ச் 31, 2022க்குள் முடிக்கவில்லை என்றால், பான் கார்டு செயலிழந்துவிடும். தற்போது பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான வழிமுறைகளை பின்வருமாறு காண்போம்.
1) வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டல் https://incometaxindiaefiling.gov.in/-க்கு செல்லவும்.
2) அதில் உங்கள் விவரங்களுடன் பதிவு செய்யவும். PAN யூசர் ஐடியாக இருக்கும்.
3) இப்போது, பயனர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.
4) ஒரு பாப்-அப் விண்டோ தோன்றி,உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும்.
5) அவ்வாறு விண்டோ தோன்றவில்லை என்றால், மெனு பாரில் உள்ள 'புரொஃபைல் செட்டிங்ஸ் ' என்பதற்குச் சென்று 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.
6) PAN விவரங்களின்படி பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே குறிப்பிடப்படும்.
7) உங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு திரையில் பான் விவரங்களைச் சரிபார்க்கவும்.
8) உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு "லிங்க் நவ் " என்பதை கிளிக் செய்யவும்.
9) இப்போது ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்ட செய்தி திரையில் தோன்றும்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு EPFO-ன் அதிரடி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR